வனப்பகுதிகளில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்!

வனப்பகுதிகளில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்!

ஒடுகத்தூர் வனப்பகுதியில் வனவிலங்குகளுக்காக தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


ஒடுகத்தூர் வனப்பகுதியில் வனவிலங்குகளுக்காக தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் வனக்கோட்டத்தில் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது ஒடுகத்தூர் வனச்சரகம். இதில் யானை, காட்டெருமை, புள்ளிமான், காட்டு ஆடு, முயல், ஓநாய், குள்ளநரி, உட்பட விஷப் பாம்புகளும், மலைப்பாம்புகளும் வசித்து வருகின்றது. கோடைக் காலங்களில் தண்ணீர் தேடி ஒடுகத்தூர் வனச்சரகத்தில் இருந்து அருகில் உள்ள அமிர்தி ஆகிய வனச்சரகங்களில் உள்ள வனப் பகுதிகளுக்கு வனவிலங்குகள் இடம் பெயர்வது வழக்கம்.

இந்நிலையில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே கடும் வெயில் காரணமாக வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வேகமாக குறைந்துவிட்டது. இதனால் தற்போது சுட்டெரிக்கும் கோடைக் வெயிலில் தாக்கு பிடிக்க முடியாமல் வனவிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வனத்தைவிட்டு வெளியேறி ஆங்காங்கே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு இடம் பெயருகின்றது.

அவ்வாறாக வரும் வனவிலங்குகளை மனிதர்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் வேட்டையாடி உண்ணுகின்றன. இதனால் வனவிலங்குகள் அழிவை சந்தித்து வருகின்றது. தற்போது இதனை தடுக்க ஒடுகத்தூர் வனச்சரகத்தில் உள்ள 12 பகுதிகளிலும் உள்ள 10கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதில் ஒடுகத்தூர் பரவமலை உள்ள பெரிய தண்ணீர் தொட்டிகளில் வனவர் பழனி தலைமையில் வனக்காப்பாளர் சங்கீதா டிராக்டர்களில் தண்ணீர் கொண்டு வந்து தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுப்பட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story