உலக சுற்றுச் சூழல் தின விழிப்புணர்வு
உலக சுற்றுசூழல் தினம்
அரியலூரில் அருகே கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் வனத்துறையினர் சார்பில் உலக சுற்றுச் சூழல் தின விழிப்புணர்வுநிகழ்ச்சி நடைபெற்றது
அரியலூர், ஜூன் 6- உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி, அரியலூர் அடுத்த கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட வன அலுவலர் இளங்கோவன், சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒரு மரக்கன்றுகளையாவது நட்டு பராமரிக்க வேண்டும்.தற்போது ஏற்படும் வெப்பத்தை சமாளிக்க அதிக அளவு மரக்கன்றுகளை நட வேண்டும் என கூறி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் சுற்றுச்சூழல் குறித்து நடத்தப்பட்ட ஓவியப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், அரியலூர் வனச் சரக அலுவலர் ச. முத்துமணி, வனவர் பாண்டியன், வன காப்பாளர்கள் பாலசுப்பிரமணி, விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அக்கல்லூரியின் சுற்றுச்சூழல் அறிவியல் துறைத் தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். பேராசிரியர்கள் அனிதா, செந்தில்குமார் ,வீரமணி மற்றும் வரலாற்று துறை தலைவர் ரவி ஆகியோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
Next Story