பீனிக்ஸ் பெண்கள் மற்றும் மகளிர் அறக்கட்டளை சார்பில் யோகா தினம்

பீனிக்ஸ் பெண்கள் மற்றும் மகளிர் அறக்கட்டளை சார்பில் யோகா தினம்
அங்கராயநல்லூர் கிராமத்தில் பீனிக்ஸ் பெண்கள் மற்றும் மகளிர் அறக்கட்டளை சார்பில் யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி நடைபெற்றது. .
அங்கராயநல்லூர் கிராமத்தில் பீனிக்ஸ் பெண்கள் மற்றும் மகளிர் அறக்கட்டளை சார்பில் யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி நடைபெற்றது. .

ஜெயங்கொண்டம் அருகே உலக யோகா தினத்தை முன்னிட்டு பீனிக்ஸ் பெண்கள் மற்றும் மகளிர் அறக்கட்டளை சார்பில் யோகா பயிற்சி நடைபெற்றது.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அங்கராயநல்லூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் வளாகத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு பீனிக்ஸ் பெண்கள் மற்றும் மகளிர் அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகள் மற்றும் பெண்களுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது.

இதில் பீனிக்ஸ் பெண்கள் மற்றும் மகளிர் அறக்கட்டளையின் சார்பில் நிகழ்ச்சிக்கு டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ் தலைமையில் யோகா பயிற்றுனர் ரேவதி பயிற்சி அளித்தார்.நிகழ்ச்சியில் முன்னிலை சந்திரா, விஜி வகித்தனர். இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகா பயிற்சியினை பெற்றனர்.

Tags

Next Story