சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் யோகா மகா உற்சவம்

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் யோகா மகா உற்சவம்

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் யோகா மகா உற்சவம் நடந்தது.

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் யோகா மகா உற்சவம் நடந்தது.

ஹார்ட் புல்னெஸ் கல்வி நிறுவனமானது இந்திய கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து யோகா மகா உற்சவ நிகழ்ச்சியை சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் உடல் ஆரோக்கியத்திற்கும், மன அமைதிக்கும் யோகா இன்றியமையாதது என்பதை வலியுறுத்தும் நோக்கத்துடன் நடத்தியது. சுமார் 160 நாடுகள் இணைந்து யோகா தியானத்தை வலியுறுத்தும் பொருட்டு தொடங்கப்பட்ட இம் முயற்சியில் ஓர் பகுதி நிகழ்வாக சேலத்தில் தொடங்கப்பட்ட யோகா மகா உற்சவ நிகழ்ச்சிக்கு விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

இதில் துணை மேயர் சாரதா தேவி மற்றும் உதவி போலீஸ் கமிஷனர் வெங்கடேஷ் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். தொடந்து 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் உடலும் உள்ளமும் நலம் பெறுவதற்கான யோகாசன முறைகள், முத்திரைகள், பிராணயாமம் போன்றவை முற்றிலும் இலவசமாக பயிற்சி அளிக்கபடவுள்ளது. முதல் நாள் நிகழ்ச்சியில் சேலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை சேலம் ஹார்ட் புல்னெஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கஸ்தூரி, சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரவீந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story