சேலத்தில் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

சேலத்தில் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
X

சேலத்தில் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்
சேலம் மாசிநாயக்கன்பட்டி காந்திநகர் காலனியை சேர்ந்தவர் ஆரோன் குமார் (வயது 31). இவர் நேற்று முன்தினம் அயோத்தியாப்பட்டணத்தில் அய்யப்ப பக்தர்களிடம் தகராறு செய்தார். அப்போது அங்கிருந்த கன்னங்குறிச்சியை சேர்ந்த தொழிலாளி பாலாஜி (38) என்பவர், அவர்களை சமாதானம் செய்து விலக்கி விட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆரோன்குமார், பாலாஜியை கற்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர், தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாலாஜி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story