மீனவருக்கு கத்திக்குத்து : வாலிபர் கைது

X
மீனவருக்கு கத்தி குத்து
தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் தாக்கி பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர.
தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் தாக்கி பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் களஞ்சியராஜ் (46). மீனவர் ஆன இவர் தூத்துக்குடி பூபால்ராயபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ஒரு வாலிபர் இவரிடம் கத்தியக்கட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.
ஆனால் அவர் கொடுக்க மறுக்கவே அவரை கத்தியால் குத்தினார். இதில் அவர் காயம் அடைந்த களஞ்சியராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்கு பதிவு செய்து தூத்துக்குடி கோவில் பிள்ளை விளையைச் சேர்ந்த தாசன் மகன் நிக்சன் (19) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
