யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம் கருத்து.

யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம் கருத்து.

சவுக்கு சங்கர் 

யூடியூப் சேனல்கள்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் ஒழுங்கற்று செயல்படுகிறது அதை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரமிது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு கருத்து தெரிவித்துள்ளார்.

காவல்துறை அதிகாரிகளையும் பெண் காவலர்களையும் ஆபாசமாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

காவல்துறையினர் தன்னை கைது செய்யக்கூடும் என்பதால் முன்ஜாமின் கேட்டு பெலிக்ஸ் ஜெரால்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். யூடியூப் சேனல்கள்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் ஒழுங்கற்று செயல்படுகிறது அதை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரமிது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு கருத்து தெரிவித்துள்ளார். முன் ஜாமின் மனு மீது ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நேர்காணல் அளிக்க வருபவர்கள் அவதூறான கருத்துக்களை தெரிவிக்க தூண்டும் நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும் என்று நீதிபதி குமரேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story