யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு 17ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு 17ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

சவுக்கு சங்கர் 

காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர் சமீபத்தில் யு டியூப் சேனல் ஒன்றிக்கு நேர்காணல் அளித்திருந்தார்.அதில் காவல்துறை அதிகாரிகள் குறித்தும் பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார்இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைமில் புகார் பதிவு செய்யபட்டது. புகாரின் பேரில் Youtuber சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைம் போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை நேற்து அதிகாலை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அவரை அங்கிருந்து கோவைக்கு போலிசார் மூலம் வேன் மூலம் அழைத்து வந்தனர்.

தாராபுரம் அருகே பேக்கரி ஒன்றில் டீ குடித்து விட்டு மீண்டும் கிளம்பிய போது போலீஸ் வேன் மீது கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் சவுக்கு சங்கர் மற்றும் 2 காவல்துறையினர் லேசான காயமடைந்தனர். இதனையடுத்து அனைவரும் தாராபுரம் மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் வேறு வாகனம் மூலம் அங்கு இருந்து கோவை வந்தனர்.கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து காலை 11 மணி முதல் சவுக்கு சங்கரிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரணை மாலை 4 மணி வரை நீடித்தது.இதனைத் தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அ

ங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.இதனிடையே கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் தகவல் கிடைத்த திமுக மகளிர் அணியை சேர்ந்தவர்கள் நீதிமன்ற வளாகம் முன்பு திரண்டனர். பெண்களை அவதூறாக பேசும் சவுக்கு சங்கரை சிறைக்குள்ளே வைக்க வேண்டும் எனவும் வெளியே விடக்கூடாது எனவும் முன்னாள் மாமன்ற உறுப்பினரான அன்னம்மாள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பெண் காவலர்கள் மற்றும் அரசு பணியில் இருப்பவர்களை மிகவும் இழிவாக சவுக்கு சங்கர் தொடர்ந்து பேசி வருவதாகவும் தெரிவித்தார் அப்போது தெரிவித்தார். பரிசோதனைக்கு பின்னர் அவர் மாலை 5 மணி அளவில் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.அப்பொழுது அங்கு கூடியிருந்த திமுக மகளிர் அணியினர் சவுக்கு சங்கருக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் செருப்புகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் சவுக்கு சங்கரை விடுவிக்க கூடாது எனவும் அவரை சிறையிலேயே வைத்திருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். போலீசார் திமுக மகளிர் அணியினரை அப்புறப்படுத்தி சவுக்கு சங்கரை பாதுகாப்பாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

சவுக்கு சங்கர் சார்பில் அதிமுக வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் ஆஜரான நிலையில் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபாலகிருஷ்ணனின் அறையில் விசாரணையானது நடைபெற்றது.அதிமுக வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் சவுக்கு சங்கரை ரிமாண்ட் செய்யக்கூடாது என வலியுறுத்தி வாதங்களை முன் வைத்தார்.சைபர் கிரைம் ஆய்வாளர் அருண் நீதிபதியிடம் வாதங்களை முன்வைத்தார்.இரு தரப்பினரும் சுமார் ஒரு மணி நேரம் தங்கள் வாதங்களை நீதிபதி கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் வைத்தனர்.நக்கீரன் கோபால் வழக்கில் நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன் 2019 ஆம் ஆண்டு 7 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை விதிக்ககூடிய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிரிவு 41 A வின் கிழ் நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்கவேண்டும் என்ற உத்திரவினை மேற்கோள்காட்டி வாதாடிய அதிமுக வழக்ககறிஞர் கோபாலகிருஷ்ணன் அந்த சட்டத்தை பயன்படுத்தியே நக்கீரன் கோபால் பிணைபெற்றார் பெற்றார் என்பதை தெரிவித்தார்.

ஆனால் சவுக்கு சங்கர் வழக்கில் காவல் துறையினர் இந்த சட்ட நடைமுறைகளை பின்பற்றவில்லை எனவும் தெரிவித்தார்.இதனுடைய திமுக பெண் வழக்கறிஞர்கள் மூன்று பேர் தனித்தனியாக நீதிபதி கோபாலகிருஷ்ணனிடம் சவுக்கு சங்கரை விடுவிக்க கூடாது என வலியுறுத்தி மனு தாக்கல் செய்தனர். சவுக்கு சங்கர் தொடர்ச்சியாக பெண்களை இழிவு படுத்தும் விதமாக பேசி வருவதாகவும் அதனால் அவரை இந்த வழக்கில் விடுவிக்க கூடாது எனவும் வலியுறுத்தினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கோபாலகிருஷ்ணன் சவுக்கு சங்கர் ரிமாண்ட் செய்யப்படுவது தொடர்பான தீர்ப்பை அவரை அவரது அறையில் அமர்ந்து தட்டச்சு செய்தார். இரவு பத்து மணி வரை நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் காத்திருந்த நிலையில் இரவு 10.15 மணியளவில் நீதிபதி கோபாலகிருஷ்ணன் சவுக்கு சங்கரை 17ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

இதனை அடுத்து நீதிமன்ற பணிகள் முடிவடைந்து 11:15 மணி அளவில் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் இருந்து கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்வதற்காக அழைத்துவரப்பட்டார்.அப்போது ஸ்டாலின் குடும்பம் கொள்ளை அடிப்பதற்காக சவுக்கு மீடியா மீது பொய் வழக்கு போடுவதாக சங்கர் சத்தம் போட்டபடி சென்றார். காவல்துறையினர் அவரை பேசவிடாமல் தடுத்து வாகனத்தில் ஏற்றி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story