2GB டேட்டா... ரிலையன்ஸ் ஜியோவின் அட்டகாசமான ரீசார்ஜ் பிளான்!!

2GB டேட்டா... ரிலையன்ஸ் ஜியோவின் அட்டகாசமான ரீசார்ஜ் பிளான்!!

ரீசார்ஜ் பிளான்

ஜியோ உள்ளிட்ட தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் இரு மாத்திற்கு முன் கட்டணங்களை உயர்த்திய நிலையில், பல வாடிக்கையாளர்கள் விலகிச் செல்ல முடிவெடுத்தனர்.

இரு மாதத்திற்கு முன்னர் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த பிறகு, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களும், கட்டண உயர்வை அறிவித்தன. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கினர்.

வாடிக்கையாளர்களை மீண்டும் தன் பக்கம் ஈர்க்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், குறைந்த கட்டணம் கொண்ட மலிவான திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. சமீபத்தில் பண்டிகை கால சலுகைகளையும் அறிவித்தது.

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாற நினைக்கும் வாடிக்கையாளர் மனதை மாற்றும் வகையில், ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்காக பல கவர்ச்சிகரமான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் ரூ.1049 திட்டமும் ஒன்றாகும்.

ஜியோ OTT ரீசார்ஜ் திட்டம்: ரிலையன்ஸ் ஜியோவின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை சுமார் 49 கோடி என்ற அளவில் உள்ள நிலையில், ஜியோ தனது ரீசார்ஜ் திட்டத்தை சமீபத்தில் புதுப்பித்துள்ளது. ஜியோ நெட்வொர்க்கை பயன்படுத்து கோடிக்கணக்கான இந்தியர்கள் பலன் பெறும் இந்த திட்டம் குறித்துஅறிந்து கொள்ளலாம்.

ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் பிளான்: ஜியோவின் இந்த திட்டத்தில் இலவச அழைப்பு, டேட்டா மற்றும் OTT ஆகிய நன்மைகளைப் பெறுவீர்கள். கால், டேட்டா, ஓடிடி நன்மைகள என அனைத்தையும் ஒரே திட்டத்தில் பெற விரும்புபவகளுக்கு ஜியோ இந்த திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.1049 பிளான்: ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களாகும். மேலும் இதில் வரம்பற்ற குரல் அழைப்பு என்னும் அன்லிமிடெட் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி ஆகிய நன்மைகளுடன் OTT நன்மைகளும் உண்டு.

5ஜி டேட்டா: உங்களுக்கு அதிக டேட்டா தேவைப்பட்டால் இந்த திட்டமும் நல்ல தேர்வாக இருக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் மொத்தம் 168ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள், அதாவது தினமும் 2ஜிபி அதிவேக டேட்டாவைப் பயன்படுத்தலாம். உங்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் இருந்தால், இந்த திட்டத்தில் வரம்பற்ற 5ஜியையும் பயன்படுத்தலாம்.

OTT நன்மைகள்: இந்த ரீசார்ஜ் திட்டம் OTT பார்வையாளர்களுக்கு OTT சலுகையைக் கொண்டு வந்துள்ளது. இதில் நீங்கள் 84 நாட்களுக்கு மூன்று பெரிய OTT ஆப்களின் சந்தாவைப் பெறுவீர்கள். Sony Liv, Jio Cinema மற்றும் ZEE5 ஆகியவற்றின் இலவச சந்தாவைப் பெறுவீர்கள்.

Tags

Next Story