உலகத்தை கண்முன்னே காட்டும் கேமரா !

உலகத்தை கண்முன்னே காட்டும் கேமரா !

கேமரா

நம் உருவத்தையோ நாம் காணும் காட்சிகளையோ ஒளியில் பதிவு செய்து நிழற்படமாக ஆக்கிக்கொள்ள உதவும் பொருட்டு கண்டுபிடிக்கப் ULL கேமரா சாதனம்தான் நிகான்.

'ஃபோட்டோகிராஃபி' என்ற ஆங்கிலச் சொல் 'ஃபோட்டோஸ்' (ஒளி) மற்றும் 'கிராஃபியன்' (வரைதல்) ஆகிய கிரேக்க வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டது. இந்த வார்த்தை முதன்முதலில் 1839-ஆம் ஆண்டில் சர் ஜான் எஃப். வி. ஹெர்ஸ்ச்செல் என்ற விஞ்ஞானியால் பயன் படுத்தப்பட்டது. ஃபோட்டோகிராஃபி என்பது கதிர் வீச்சால் (ரேடியேஷனால்) ஒரு சாதனத்தில் உருவங்களைப் பதிவு செய்யும் ஒரு முறை ஆகும்.

1827-இல் முதல் நிழற்படம் பதிவு செய்யப்பட்டது. இதனை 'ஜோசப் நிக்போர் நிப்ஸ்' என்பவர் 8 மணி நேரம் எடுத்து பதிவு செய்தார். கிட்டத்தட்ட அதே காலத்தில், பிரெஞ்சுக்காரர் லூயிஸ் ஜேக்ஸ் மேன்ட் டாகுரி என்பவர்ஆய்வு செய்து, அரை மணிக்கும் குறைவான நேரத்தில் நிழற்படத்தை எடுத்தார்.

ஆக, நடைமுறைக்குப் பயன்பட்ட முதல் ஃபோட்டோ கிராஃபி முறையைக் கண்டுபிடித்தவர் - 'லூயிஸ் ஜேக்ஸ் மேன்ட் டாகுரி'. இந்த பிரெஞ்சுக்காரர் 1789, நவம்பர் 18- ஆம் நாள் பாரிஸ் நகருக்கு அருகே பிறந்தார். ஒரு பெயிண்டராக தன் தொழிலைத் தொடங்கினார். 1820- களில் (டிரான்ஸ்லுசென்ட்) ஒளி ஊடுருவும் ஓவியங்களின் மீது பட்ட ஒளியின் விளைவை ஆராயத் தொடங்கினார். 1829-இல் ஜோசப் நிக்போர் நிப்ஸ் உடன் இணைந்து ஃபோட்டோகிராஃப் மற்றும் கேமரா கருவிக்கு நிலையான இறுதி வடிவம் கொடுக்க ஆராய்ந்தார். ஆனால், 1833-இல் நிப்ஸ் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.

பல ஆண்டுகள் செய்த ஆராய்ச்சியின் பலனாய் டாகுரி மிகவும் வசதியான ஃபோட்டோகிராஃபி முறையைக் கண்டுபிடித்தார். அதற்கு 'டாகுரியோடைப்' என்ற பெயரையும் வழங்கினார். 1839-இல் டாகுரியும், நிப்ஸ்-ன் மகனும் டாகுரியோடைப்புக்கான உரிமைகளை பிரெஞ்சு அரசுக்கு விற்றனர். அந்தக் கண்டுபிடிப்பு முறை பற்றிய விளக்கங்கள் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன.

டாகுரியோடைப் முறைதான் ஃபோட்டோகிராஃபி கலையின் மூல ஆதாரமாக விளங்கியது. இந்த முறையானது உலகெங்கும் மிக விரைவில் பிரபலமானது. 1850-க்குள் நியுயார்க் நகரில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட டாகுரியோடைப் ஸ்டூடியோக்கள் பெருகி இருந்தன.

Tags

Next Story