டிஸ்ப்ளே இல்லாத லேப்டாப்... !!!

டிஸ்ப்ளே இல்லாத லேப்டாப்... !!!

லேப்டாப்

டெக் உலகில் முதல்முறையாக டிஸ்ப்ளே இல்லாத, அதாவது திரையே இல்லாத ஒரு லேப்டாப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கண் முன் விரியும் 100 இன்ச் ஸ்கிரீன்இஸ்ரேலிய நிறுவனமான Sightful இந்த டிஸ்ப்ளே இல்லாத, Augmented Reality கண்ணாடியை பயன்படுத்தி இயங்கும் லேப்டாப்பை உருவாக்கி உள்ளது. AR Laptop For Work என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் Sightful Spacetop G1 லேப்டாப்பை அந்த Augmented Reality கண்ணாடி உடன் இணைந்திருக்கும்.

அதன்மூலம் உங்கள் பார்வைக்கு 100-இன்ச் ஸ்கிரீன் தெரியும். அதில் நீங்கள் சிங்கிள் மானிட்டர் அல்லது மல்பிடிபிள் மானிட்டரை வைத்துக்கொள்ளலாம். மேலும், இந்த லேடாப்பில் USB-C போர்ட் உள்ளது, இதன்மூலம் உங்களுக்கு தேவைப்படும்பட்சத்தில் மானிட்டரையும் இணைத்துக்கொள்ளலாம்.AR கண்ணாடி, இரண்டு OLEDஸ்கிரீன் மற்றும் தலா ஒரு கண் பகுதிக்கு 1080p ரெஸ்சோல்யூஷன் உடனும், 90Hz ரெப்ரெஷ் ரேட் உடனும் வருகிறது.

இந்த லேப்டாப் Qualcomm Snapdragon QCS8550 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த லேப்டாப்பில் 16ஜிபி RAM மற்றும் 128ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உள்ளது.இதன் விலை 1900 அமெரிக்க டாலர் ஆகும். அதாவது, இந்திய மதிப்பு படி ரூ.1,58,575 ஆகும். இதில் தற்போது 200 அமெரிக்க டாலர் தள்ளுபடி செய்யப்படுவதால் 1700 அமெரிக்க டாலர் விலையில் நீங்கள் வாங்கலாம். அதாவது, இந்திய மதிப்பு படி ரூ.1,41,883 ஆகும்.

Tags

Next Story