ஏர்கண்டிஷன் !!
ஏர்கண்டிஷன்
ஏர்கண்டிஷன் ஹாவிலேன்ட் கேரியர் என்ற அமெரிக்கர் தான் குளிர்சாதன கருவியை கண்டுபிடித்தார். 1901 ஆம் ஆண்டில் கேரியர் நியூயார்க் நகரில் உள்ள கார்னல் பல்கலைக்கழகத்தில் பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டு அவர் முதல் ஏசி இயந்திரத்தை உருவாக்கி சாதனை புரிந்தார்.
கேரியர் எம்.இ பட்டம் பெற்றதும் ப்ரூக்லின் ப்ரிண்டிங் ப்ளான்ட் என்ற அச்சகத்தில் வேலைக்கு சேர்ந்தார். அச்சகத்துக்குள் இயந்திரம் ஓடும் போது வெப்பம் கூடுவதால் காகிதத்தில் மிகச் சரியாக அச்சும், கலரும் சரியாக அமைவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காணும் விதமாகத்தான் கேரியர் ஏசியை உருவாக்கினார்.
புதிய குளிர்சாதனம் அறைக்குள் தட்பவெப்ப நிலையை மாறாமல் வைத்திருக்க உதவியது. மேலும் நான்கு கலர்களும் காகிதத்தில் மிகச் சரியாகப் பதிவாக ஏதுவானது. குளிர்சாதனத்தை வடிவமைத்து உருவாக்கியதற்காக 1906 இல் முதல் காப்புரிமை கேரியருக்கு வழங்கப்பட்டது. அவர் பெற்ற பல்வேறு காப்புரிமைகளில் இதுவே முதல் காப்புரிமை ஏசியின் தந்தை என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
கேரியர் ஆனாலும் ஏசி என்ற சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர் ஸ்டூவர்ட் எச் க்ரைமர் என்ற ஒரு டெக்ஸ்டைல் இன்ஜினியர் தான் டெக்ஸ்டைல் ஆலையில் காற்றின் ஈரப்பதத்தை அதிகரிக்க செய்யும் கருவி ஒன்றை கண்டறிந்து அதற்காக காப்புரிமை கேட்டு அழைத்த விண்ணப்பத்தில் தான் கிரேமர் இந்த ஏர்கண்டிஷனிங் என்ற சொல்லை பயன்படுத்தினார்.
கேரியரின் அந்த நிறுவனம் ஏசி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டது 1921 இல் கேரியர் சென்ரிஃப்யூகல் ரெஃப்ரிஜிரேஷன் மெஷினை உருவாக்கியதற்கான காப்புரிமை பதிவு செய்தார். பெரிய பரப்பளவு கொண்ட இடங்களில் ஏசியை நடைமுறைப்படுத்திய முதல் எந்திரம் இதுதான்.