ஏர்டெல் வாடிக்கையாளர்களும் இனி நெட்பிளிக்ஸ் பார்க்கலாம்!

ஏர்டெல் வாடிக்கையாளர்களும் இனி நெட்பிளிக்ஸ் பார்க்கலாம்!

ஏர்டெல் 

ஏர்டெல் வாடிக்கையாளர்களும் இனி நெட்பிளிக்ஸ் பார்த்து ரசிக்கும் வகையில் ப்ரீப்பெய்ட் பிளான் வந்துள்ளது, போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் பிளான் இருக்கிறது.

ஏர்டெல் ரூ 1499 திட்ட விவரங்கள் (Airtel Rs 1499 Plan Details): இ

துவொரு ப்ரீபெய்ட் திட்டமாகும். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நெட்பிளிக்ஸ் மட்டுமல்லாமல், தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, தினசரி 3 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். அதிகபட்சமாக 252 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். 3 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்கிறது.அப்பல்லோ 24|7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா கொடுக்கப்படுகிறது. ப்ரீ ஹலோட்யூன்ஸ் (Free Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.இந்த சந்தா 84 நாட்களுக்கு கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 1199போஸ்ட்பெய்ட்திட்டமாகும்.

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். 150 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஃபேமிலி சிம் கார்டு கனெக்சன் சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 3 கூடுதல் சிம் கார்டுகளுக்கும் சலுகைகள் கிடைக்கின்றன. சிம் கார்டுகளுக்கு தலா 30 ஜிபி டேட்டா வழங்கப்படும். அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா (Disney+ Hotstar) மற்றும் விங்க் பிரீமியம் (Wynk Premium) சந்தா கொடுக்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ 1499 இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில்

பிரைமரி சிம் கார்டுக்கு மட்டுமல்லாமல் 4 கூடுதல் சிம் கார்டுகளுக்கும் சலுகைகள் கிடைக்கின்றன. ஆகவே, பிரைமரி சிம் கார்டுக்கு அன்லிமிடெட் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 150 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.கூடுதல் சிம் கார்டுகளுக்கு தலா 30 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகைகள் கிடைக்கிறது.இந்த திட்டத்தில் 200 ஜிபிக்கான டேட்டா ரோலோவர் சலுகையும் வருகிறது. ஓடிடி சலுகைகளை பார்க்கையில், அமேசான் பிரைம் வீடியோ சந்தா, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது.

Tags

Next Story