புதிய சலுகைகளுடன் விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்திய ஏர்டெல் !!

புதிய சலுகைகளுடன் விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்திய ஏர்டெல் !!

 ஏர்டெல்

இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமான ஏர்டெல். அவ்வப்போது பிரீபெயிட் சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது.

அந்த வரிசையில் தற்போது புதுவகை ரிசார்ஜ் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. ஏர்டெல் அறிவித்து இருக்கும் புதிய சலுகைகளுடன் விபத்து காப்பீடு வசதி வழங்கப்படுகிறது.

இதற்காக ஏர்டெல் நிறுவனம் ஐசிஐசிஐ லாம்பார்டு உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம் ரூ.239, ரூ.399 மற்றும் ரூ. 999 சலுகைகளில் விபத்து காப்பீடு வசதி வழங்குகிறகு.

இத்துடன் வழங்கப்படும் விபத்து காப்பீடு திட்டத்தில் உயிரிழப்புக்கு ரூ. 1 லட்சம், ரீசார்ஜ் செய்த 30 நாட்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது.

ரிசார்ஜ் பிளான் படி தினமும் டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இதில் சலுகையின் வேலிடிட்டி நாட்கள் ரிசார்ஜ் பிளான் படி மாறி இருக்கும்.

Tags

Next Story