ஏர்டெல் வழங்கும் அற்புதமான டேட்டா லோன் வசதி?

ஏர்டெல் வழங்கும் அற்புதமான டேட்டா லோன் வசதி?

ஏர்டெல்

இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டல் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டேட்டா லோன் வசதி என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதை ஏர்டெல் நிறுவனம் எமர்ஜென்சி டேட்டா லோன் என்று அழைக்கப்படுகிறது. ரீசார்ஜ் செய்யாமலேயே டேட்டா தேவைப்படும் வாடிக்கையாளர்கள் ஆகவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நீங்கள் முக்கியமான கான்ஃபரன்ஸ் அல்லது வீடியோ பார்த்துக் கொண்டிருந்தால் உங்களது டேட்டா திடீர்னு தீர்ந்து போகலாம் அந்த சூழ்நிலையில் நீங்கள் ரீசார்ஜ் செய்ய முடியாத நிலை இருந்தால் இந்த ஏர்டெல் திட்டம் உங்களுக்கு அமோகமானதா அமையும். ஏர்டெல் டேட்டா லோன் மூலம் நீங்கள் ரீசார்ஜ் செய்யாமலேயே ஒரு ஜிபி டேட்டாவை பெறலாம் .இது ஒரு நாளைக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதாவது 12 மணிக்கு அது காலாவதி ஆகிவிடும். இந்த லோனை பெற உங்கள் மொபைல் நம்பர் செயலில் இருக்க வேண்டும்.இந்த லோனை பெற நீங்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை, ஆனால் இது லோன் என்பதால் நீங்கள் ரீசார்ஜ் செய்யும்போது இந்த கடனை திருப்ப செலுத்த வேண்டியது இருக்கும் . இந்த ஏர்டெல் லோன் வசதி தற்போது தமிழ்நாடு மற்றும் பஞ்சாபில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. *141*567# அல்லது *144*10# அல்லது *121*567# ஆகிய எண்களை டயல் செய்து வழிமுறைகளை பின்பற்றி உங்கள் லோனை பெறலாம் ,அல்லது ஏர்டெல் லோன் எண்ணான 52141 என்ற எண்ணிற்கு டயல் செய்து உங்கள் லோனை நீங்கள் பெறலாம்.

Tags

Next Story