அசத்தும் ரிலையன்ஸ் ஜியோ - குறைவான கட்டணத்தில் 2 ஜிபி டேட்டா உடன் OTT பயன்கள் !!

அசத்தும் ரிலையன்ஸ் ஜியோ - குறைவான கட்டணத்தில் 2 ஜிபி டேட்டா உடன் OTT பயன்கள் !!

ரிலையன்ஸ் ஜியோ

தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் ஜூலை 3 முதல் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களை அதிகரித்துள்ளன.

வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோவை விட்டுச் செல்வதைத் தவிர்க்க, ஜியோ அவ்வப்போது சில புதிய மலிவான திட்டங்களை கொண்டு வருகிறது. இந்நிலையில், ஜியோ ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, அதில் உங்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு வசதி கிடைக்கும்.

இந்த திட்டம் 98 நாட்கள் வேலிடிட்டி கொண்டது என்பதோடு,இந்த திட்டத்தில் உங்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.10 மட்டும் தான் செலவாகும்.

ரூ 999 பெறும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 98 நாட்கள் ஆகும். இதில் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் கால் வசதியும் உண்டு. அதோடு மிக முக்கியமாக இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டாவும் (Mobile Data) கிடைக்கும்.

நீங்கள் இலவச 5G இணைய வசதியும் கிடைக்கும். கூடுதலாக, நீங்கள் இலவச Jio TV, Jio Cloud மற்றும் Jio Cinema ஆகியவற்றைப் பெறுவீர்கள்.

ரிலையன்ஸ் புதிய திட்டம் நீண்ட வேலிடிட்டி கொண்ட திட்டத்தை விரும்புவோருக்கு உதவக்கூடும். என்னும், OTT இயங்குதளங்களுக்கான அணுகலை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை பெற விரும்புபவர்களுக்கு ரூ.1,049 மற்றும் ரூ.1,299 ஆகிய கட்டணங்களின் கிடைக்கும் பிளான்கள் சிறந்த தேர்வாக இருக்கும்.

ரூ.1,049 மற்றும் ரூ.1,299 ஆகிய இரண்டு திட்டங்களும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இவை அன்லிமிடெட் கால் வசதி மற்றும் தினம் 2 ஜிபி டேட்டாவை வழங்குகின்றன. ரூ.1,049 திட்டத்தில் Sony Liv மற்றும் Zee5 ஆகியவற்றுக்கான இலவச சந்தா கிடைக்கும். ரூ.1,299 Sony Liv மற்றும் Zee5 ஆகியவற்றுடன் இலவச Netflix மொபைல் இலவச சந்தாவும் அடங்கும்.

Sony Liv, Zee5, JioCinema Premium, Lionsgate Play, Discovery+, Sun NXT மற்றும் JioTV போன்ற OTT இயங்குதளங்களின் 28 நாட்களுக்கான சந்தாவுட்டன் 10ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் ரூ.175 திட்டத்தையும் நீங்கள் வாங்கலாம்.

Tags

Next Story