ஆப்பிள் iPhone 17 - ல் OLED டிஸ்ப்ளேவை பயன்படுத்தப்படலாம் என தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிப்பு !!

ஆப்பிள் iPhone 17 - ல் OLED டிஸ்ப்ளேவை பயன்படுத்தப்படலாம் என தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிப்பு !!

ஆப்பிள் iPhone 17

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 16 தொடரை அறிமுகப்படுத்தியது, மக்கள் மிகவும் விரும்பும் ஆப்பிள் ஐபோன் வழக்கமாக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் நிலையில் ஆப்பிளின் வரவிருக்கும் ஐபோன் 17 வெற லெவல் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். புதிய ஐபோனில் ஒரு புதிய காட்சி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்றுதகவல் வெளியாகியுள்ளது.

இது, ஐபோனின் வடிவமைப்பை மேலும் கவர்ச்சியானதாக மாற்றும் எனவும் ஆப்பிள் iPhone 17-இல் புதிய டிஸ்ப்ளே தொழில்நுட்பம் இருப்பதாக, அதன் உற்பத்தி தொடங்குவதற்கு முன்னரே செய்திகள் வெளிவருகின்றன. தொலைபேசியின் வடிவமைப்பு மிகவும் மெல்லியதாக இருக்கலாம். தைவானிய நிறுவனமான நோவடெக் ஒரு புதிய வகை OLED டிஸ்ப்ளேவை உருவாக்கியுள்ளது, இது அடுத்த ஆண்டு ஐபோன்களில் பயன்படுத்தப்படலாம் என தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் பெயர் டச் அண்ட் டிஸ்ப்ளே டிரைவர் ஒருங்கிணைப்பு (Touch and Display Driver Integration TDDI (டிடிடிஐ), இது டச் சென்சார் லேயர் மற்றும் டிஸ்ப்ளே டிரைவரை ஒரே யூனிட்டாக இணைக்கிறது. இது ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவை மெலிதாக்குகிறது. அதாவது ஏற்கனவே இருக்கும் போனின் தடிமனை கணிசமாகக் குறைக்கும் என்பதால், ஐபோன்கள் மெல்லிய போன்களாகக் இருக்கும் என தெரிவித்துள்ளது.

Tags

Next Story