கூகுள் ஜெமினியின் அசத்தல் அப்டேட் !!!!
கூகுள் ஜெமினி
பல்வேறு அம்சங்களுடன் வெளியாகியிருக்கும் கூகுள் ஜெமினி ஏஐ டூலுக்கு மாத சந்தா செலுத்தினால் மட்டுமே பயன்படுத்த முடியும்.
கூகுள் ஜெமினி ஏஐ அப்டேட் வெர்சன்
கூகுள் ஜெமினி அட்வான்ஸ்டு, கூகிளின் அல்ட்ரா 1.0 AI மாடலால் இயக்கப்படுகிறது. இந்த அப்டேட் அட்வான்ஸ் மாடலில், மிகவும் சிக்கலான பணிகளை கூட எளிதாக செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவற்றை பயன்படுத்த கூகுள் கட்டணம் நிர்ணயித்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு ஸ்டாண்டர்ட் மற்றும் பிரீமியம் அடுக்கு சந்தாக்களுக்கு, இலவச ஜெமினி அட்வான்ஸ்டு அணுகலை Google வழங்குகிறது.
முன்னோட்டமாக இரண்டு மாதங்களுக்கு இலவச ஜெமினி அட்வான்ஸ்டு சந்தாவை இலவசமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தியாவில், ஜெமினி அட்வான்ஸ்டை முயற்சி செய்ய விரும்புவோர் மாதம் ரூ.1,950 செலுத்த வேண்டும். இருப்பினும், நீங்கள் Google One சந்தாதாரராக இருந்தால், எந்த கட்டணமும் இல்லாமல் இரண்டு மாதங்களுக்கு ஜெமினி அட்வான்ஸ்டுக்கான சப்ஸ்கிரிப்சனைப் பெறலாம்.
Google One சந்தா:
1. அடிப்படை (100ஜிபி/மாதம் ரூ.130)
2. ஸ்டாண்டர்ட் (மாதம் 200ஜிபி/ ரூ 210)
3. பிரீமியம் (2TB/ மாதம் ரூ. 650)
4. பிரீமியம் (5TB/ மாதம் ரூ. 1,625)