கத்திரிக்கோல் உருவான கதை தெரியுமா ?

கத்திரிக்கோல் உருவான கதை தெரியுமா ?

கத்திரிக்கோல்

நம் அன்றாட வாழ்க்கை யோடு ஒன்றிப்போய்விட்ட பொருட்களில் ஒன்று கத்திரிக் கோல். வீடு, அலுவலகம் மருத்துவ மனை ஆகிய இடங்களில் கத்திரிக் கோல் கண்டிப்பாக இருக்கும். தையலகத் திலும், முடி திருத்தும் நிலையத்திலும் கத்திரிக் கோல் தான் முக்கிய கருவி. மிக உபயோக மான பொருளாக விளங்கும் இந்த கத்திரிக்கோல் எப்போது, யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

கத்திரிக்கோலின் பயன்பாடு மிகவும் பழங்காலத்தி லேயே இருந்திருக்கிறது. கி.மு. 14-ஆம் நூற்றாண்டு காலத்தில் கத்திரிக்கோல் இருந்ததாக ஜீன்-கிளாடு மார்கியூரன் என்ற எழுத்தாளர் தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் எகிப்திய வெண்கலக் சுத்திரிக்கோல்கள், நிகரற்ற கலைப்பொருளாக விளங்கின. கைவினைப் பொருள்களைத் தயாரிப்பதில் உபயோகமாக இருந்தன. மேலும் ஆண்கள் மற்றும் பெண்களின் முடியைத் திருத்தி, அழகுபடுத்தப் பயன்பட்டன. வெண்கல உலோகத்தால் தயாரிக்கப்பட்ட இந்தக் கத்திரிக்கோல்களின் உற்பத்தி பெருகின. இப்படி 1948-இல் 'ஜே. விஸ் அண்டு சன்ஸ்' வெளியிட்ட 'கத்திரிக்கோலின் கதை' என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அதே புத்தகத்தில் 'சர்ப்ளின்டர்ஸ் பீட்ரி என்பவர் குறுக்கும் நெடுக்குமான பிளேடு போன்ற கத்திரிக் கோலை முறைப்படுத்தி கி.பி. முதல் நூற்றாண்டுக்குப் பெருமை சேர்த்தார். 5-ஆம் நூற்றாண்டில், முடி திருத்துபவர் களும், தையல் கலைஞர்களும் தங்கள் தொழிலுக்கு ஏற்ற கத்திரிக்கோல்களை பிரதானமாகப் பயன்படுத்தியதாக ஸ்பெயின் நாட்டின் பத்திரிகையாளர் இசிடோர் என்பவர் குறிப்பு கொடுத்துள்ளார்' என எழுதப்பட்டுள்ளது.

இப்படி கத்திரிக்கோல் பற்றி, வரலாற்று நூல்கள் ஒவ்வொன்றின் மூலமும் பல தகவல்களை நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் இன்றைக்கும் நாம் கத்திரிப் பதற்காகப் பயன்படுத்தும் சாதாரண கத்திரிக்கோல்களை முதலில் கண்டுபிடித்து 1893-இல் உரிமம் பதிவு செய்தது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரைச் சேர்ந்த லூசி ஆஸ்டின் என்பவர்தான்.

Tags

Next Story