ஐஸ்கிரீம் எப்டி கண்டுபிடிச்சாங்க தெரியுமா?

ஐஸ்கிரீம் எப்டி கண்டுபிடிச்சாங்க தெரியுமா?

ஐஸ்க்ரீம்

சிறுவர்களிலிருந்து பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் பொருள் 'ஐஸ்க்ரீம்'. மண்டை காய்கிற வெயில் நேரத்தில் தொண்டைக்கு இதமாக ஐஸ்க்ரீமை விழுங்கு கிறோமே. அந்த ஐஸ்க்ரீம் கண்டுபிடிக்கப் பட்டது எவ்வாறு என்பதைப் பார்ப்போம்.

ஐஸ்க்ரீமின் தொடக்க காலம் கி.பி. 4-ஆம் நூற்றாண்டு என்று ஒரு வரலாறு உண்டு. அதற்கு முந்தைய வேறு சில குறிப்புகள் ரோமானிய பேரரசர் நீரோ (கி.பி. 37-68) தான் ஐஸ்க்ரீமின் தந்தை என சொல்கின்றன. அவர் மலைச் சிகரங்களிலிருந்து பனிக்கட்டிகளைக் கொண்டுவரச் செய்து, அவற்றோடு பழங்களைக் கலந்து ஒருவித பாகினைத் தயாரித்து உண்டார். (அதுதான் ஐஸ்க்ரீமின் ஆரம்பம் எனப்படுகிறது. ஐஸ்க்ரீமை தமிழில் 'பனிப்பாகு' என்று சொல்லலாம்)

சீனாவின் ஷாங் நகர மன்னர் கிங் டாங் (கி.பி. 618-697) பனி மற்றும் பாலைக் கலந்து பாகு தயாரிக்கும் ஒரு செய் முறையைக் கொண்டு வந்தார். அப்படி கண்டுபிடிக்கப் பட்ட ஐஸ்க்ரீம் சீனாவிலிருந்து மீண்டும் ஐரோப்பாவுக்குக் கொண்டுவரப்பட்டது. காலப்போக்கில் ஐஸ்கள், பால் மூலம் தயாரிக்கும் ஐஸ்க்ரீம்கள், பால் ஐஸ்கள் ஆகியவற்றின் செய்முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டம் அப்படி தயாரிக்கப்பட்ட ஐஸ்க்ரீம்கள் இத்தாலி மற்றும் பிரெஞ்சு அரசாங்க சபைகளில் பரிமாறப்பட்டன.) அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு அந்த ஐஸ்க்ரீம் வகைகள் இறக்குமதி ஆகின. அதன்பின் 'ஜார்ஜ் வாஷிங்டன்' 'தாமன் ஜெஃபர்சன்' மற்றும் 'டாலி மேடிசன்' (1812) உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வீட்டு விருந்தில் ஐஸ்க்ரீம் முக்கிய இடம் பிடித்தது.

1700-இல் மேரிலாண்ட் கவர்னர் 'பிளேடன்' தனது விருந்தாளிகளுக்கு ஐஸ்க்ரீம்களைப் பரிமாறி வந்ததாக குறிப்புகள் கூறுகின்றன.

1774-இல் ஃபிலிப் லென்சி' என்ற லண்டன் சமையற்கலைஞர் ஒரு நியுயார்க் செய்தித்தாளில் ஐஸ்க்ரீம் உள்பட பல்வேறு புதிய உணவு வகைகளுக்கு சலுகை விலைகள் அறிவித்திருந்தார்.

அமெரிக்காவில் முதல் ஐஸ்க்ரீம் பார்லர் 1776-ஆம் ஆண்டு நியுயார்க் நகரில் திறக்கப்பட்டது.

(அமெரிக்காவில் புதிதாகக் குடியேறியவர்கள்தான் முதல் படுத்தலில் அஸ்க் ழ் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர். அதுதான் இன்று நிலைத்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story