Whatsapp சேட்களை பேக்கப் செய்ய பணம் செலுத்த வேண்டுமா?

Whatsapp சேட்களை பேக்கப் செய்ய பணம் செலுத்த வேண்டுமா?

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப் இலவசமாக பயன்படுத்தக்கூடிய ஒரு செயலி. அதனால் உலகில் மிகவும் பிரபலமான சாட்டிங் மெசேஜ் செயலியாக whatsapp இயங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வாட்ஸ் அப் பயனர்கள் தனது அனைத்து சாட்களையும் பேக்கப் செய்வதை முற்றிலும் இலவசமாக பயன்படுத்தி வந்தனர்.உங்கள் வாட்சப் மெசேஜ்கலை மேக்கப் செய்ய ஆண்ட்ராய்டு அல்லது வாட்ஸ் அப் செயலுடன் உங்களது கூகுள் கணக்கை இணைத்திருக்க வேண்டும். அதன் மூலம் உங்கள் இந்த பேக்கப் கூகுளின் கிளவுட் பக்கத்தில் சேமிக்கப்பட்டு உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தாலும் அவை கூகுள் கிளவுட் பதிவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தன. ஆனால் இப்போது வாட்சப் நிறுவனம் இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. நவம்பரில் அறிவிக்கப்பட்ட மாற்றத்தில் 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வாட்ஸ் அப் பேக் அப்கலை உங்களது கூகுள் கிளவுட் சேமிப்பு பதிவு எண்ணில் சேமிக்கப்படும் தொழில்நுட்ப நிறுவனமான google ஒவ்வொரு கூகுள் கணக்கிற்கும் 15ஜிபி இலவச சேமிப்பிடத்தை வழங்குகிறது. ஆனால், கூகுள் டிரைவ் கூகுள் ஃபோட்டோஸ் மற்றும் ஜிமெயில் கணக்கில் 15 gp-க்கு மேலிருந்தால் கூடுதல் சேமிப்பிடத்திற்கு பணம் செலுத்த வேண்டும். google தனது விளக்க பக்கத்தில் whatsapp பேக்கப்கலை விரைவில் கூகுள் கணக்கு க்ளவுட் சேமிப்பு அளவின் எண்ணிக்கையில் சேர்க்கப்படும் என்றும் மற்ற மொபைல் தலங்களில் whatsapp கையாளப்படும் விதத்தை பொறுத்தே இது இருக்கும் என்றும் ஐபோன் உள்ள வாட்ஸ் அப் பேக்அப் ஐக்லோட் சேமிப்பு அளவின் எண்ணிக்கையில் இது சேர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டது.

Tags

Next Story