மின்னல் வேகத்தில் கணக்குபோடும் கால்குலேட்டர் உருவானது எப்படி !

கால்குலேட்டர்
கணக்கும், கணக்கீடும் நம் அன்றாட வாழ்வோடு ஒன்றிப் போன விஷயம். ஒன்றும் ஒன்றும் எத்தனை என்றால் இரண்டு என்று 29980, 54560 சேர்ந்தால் கூட்டுத்தொகை எவ்வளவு என்றால், நம்மால் எளிதில் சொல்வது அரிது. எழுதிப் பார்த்துச் சொல்ல வேண்டியிருக்கும். சற்று நேரம் பிடிக்கும். (வெகு சிலர் மனக்கணக்காக சொல்வர். அது அரிதான செயல்.
ஆனால் எந்த எண்களின் கூட்டல், பெருக்கல்,கழித்தல், வகுத்தல் என கணக்கின் எல்லா அம்சங்களையும் எளிதாக உடனே கணக்கிட மனிதன் கண்டுபிடித்த எந்திரம்தான் கால்குலேட்டர். கம்ப்யூட்டர் கண்டுபிடிக்க வழிவகுத்த வற்றில் கால்குலேட்டர் முக்கியமான ஆதாரம்.
'வில்லியம் ஷேவார்டு ஃபாரப்ஸ்' என்ற அமெரிக்கர்தான் நடைமுறைக்குப் பயன்பட்ட முதல் கணக்கிடும் எந்திரத்தைக் கண்டுபிடித்தார். கி.பி. 1885-இல் தனது கணக்கிடும் எந்திரத்துக்காகக் காப்புரிமை பதிவு செய்தார். 1888-இல் காப்புரிமை வழங்கப்பட்டது.
கணக்கிடும் எந்திரத்தைத் தயாரித்து விற்பதற்காக 1886- ஆம் ஆண்டு, ஃபாரப்ஸ் மற்றும் செய்ன்ட் லூயிசைச் சேர்ந்த பல்வேறு வர்த்தகர்கள் இணைந்து 'அமெரிக்கன் அரித்மோமீட்டர் கம்பென 'யை நிறுவினர். எந்திரத்தின் விற்பனை தொடங்கியது. ஆனாலும் பயன்படுத்துற்ேறு தங்களின் எந்திரத்தில் துல்லியமாகக் கணக்கிடுவதில் சிறு குறைபாடுகள் இருப்பதாகக் கருதினர். அதையெல்லாம். அறிந்து, குறைகளை நீக்கி மீண்டும் எந்திரத்தை விற்பனைக்கு அறிமுகப்படுத்தினார் ஃபாரப்ஸ். அப்படி மேம்படுத்தப் பட்ட கணக்கிடும் எந்திரத்துக்கான காப்புரிமையை 1893- இல் பெற்றார். அதன்பின் அந்த எந்திரத்துக்கு பெருவாரி யான வரவேற்பு கிடைத்தது.
கண்டுபிடிப்பாளர் பற்றி...
கால்குலேட்டரைக் கண்டுபிடித்த 'வில்லியம் ஷேவார்டு ஃபாரப்ஸ்' 1857-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 28- ஆம் நாள் நியுயார்க்கில் பிறந்தார். கல்வி பயின்ற பிறகு, அங்குள்ள தேசிய வங்கி ஒன்றில் கிளார்க்காகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவர் 1882-இல்செயின்ட் லூயிஸ் பகுதிக்குக் குடி பெயர்ந்தார். வங்கியில் சதவீதம்,வட்டி. கூட்டல், பெருக்கல் என அன்றாடம் கணக்கிடுபவராகப் பணிபுரிந்ததுதான் அவரை 'கால்குலேட்டர்' எனும் அற்புத சாதனத்தை உருவாக்க மிகப்பெரிய தூண்டுகோலாக அமைந்தது.
எந்திர கண்டுபிடிப்புக்குப் பிறகு, ஃபாரப்ஸ் தனது பெயரிலேயே ஒரு பெரிய நிறுவனத்தைத் தொடங்கி தொழிலதிபர் ஆனார். 1897-இல் தனது நிறுவனப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவர் 1898-இல் காலமானார்.
