அறிமுகமானது iOS 18 - எந்தெந்த ஐபோன்களுக்கு கிடைக்கும்?

அறிமுகமானது iOS 18 - எந்தெந்த ஐபோன்களுக்கு கிடைக்கும்?

ஐபோன்

ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் பயனர்களுக்கு iOS 18 Operating System-ஐ அறிமுகப்படுத்தியது. இதனால், ஐபோன் பயனர்கள் உச்சக் கட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றன. iOS 18 அனைத்து ஐபோன் பயனர்களுக்கும் கிடைக்காது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதாவது, சில ஐபோன் மாடல்களில் மட்டுமே இந்த புதிய iOS 18 வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த iOS 18 பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு வரும் 2024ஆம் செப்டம்பர் மாதமே iOS 18 செயல்பாட்டிற்கு வரும். அப்போதுதான் ஐபோன் 16 சீரிஸ் சந்தையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த புதிய iOS 18இல் செயற்கை தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதன் Siri அம்சம் மேம்படுத்துப்படும். இதன்மூலம், ஹோம் ஸ்கிரீன், லாக் ஸ்கிரீன், கன்ட்ரோல் சென்டர் ஆகியவை முற்றிலும் மாறுபடும்.

மேலும், வை-பை மற்றும் மொபைல் நெட்வோர்க் எதுவுமில்லாமல் மெசேஜ் அனுப்புவது, மெசேஜை நேரம் செட் செய்து பின்னர் அனுப்புவது போன்ர பல விஷயங்கள் இந்த OS அப்டேட்டில் வரும். அந்த வகையில், எந்தெந்த ஐபோன்களில் இந்த iOS 18 வரும் என்பதை இங்கு காணலாம்.ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் XR, ஐபோன் SE (2ஆவது தலைமுறை, அதற்கு பின்னான மாடல்கள்).

Tags

Next Story