உங்க டிஜிட்டல் பாஸ்வேர்டு ரொம்ப ஈஸியானதா ?? அப்போ உடனே மாத்திடுங்க !!
Is your digital password too easy?? Then change immediately!
உலக அளவில் அனைவராலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் டாப் 200 பாஸ்வேர்டுகளை NordPass ஒரு அறிக்கை மூலமாக வெளியிட்டுள்ளது. அதில் வழக்கம் போல டாப் 1 இடத்தில் இருப்பது ‘123456’. இது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் டாப் 1 இடத்தில் உள்ளது. உலக அளவில் 30,18,050 யூசர்கள் ‘123456’ -யை அவர்களுடைய பாஸ்வேர்டாக கொண்டுள்ளனர்.
அதிர்ச்சியூட்டும் விதமாக இவர்களில் 76,981 நபர்கள் இந்தியாவை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த எளிமையான பாஸ்வேர்டை நிச்சயமாக ஒரு நொடியிலேயே ஹேக்கர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். இது தெரிந்திருந்தும் மில்லியன் கணக்கான மக்கள் இந்த பாஸ்வேர்டை பயன்படுத்தி வருகின்றனர். அடுத்ததாக உலக அளவில் இரண்டாவது இடத்தில் ‘123456789’ உள்ளது. இதில் இந்தியா 4வது இடத்தை வகிக்கிறது.
டிஜிட்டல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது :
*எப்பொழுதும் வலிமையான மற்றும் தனித்துவமான பாஸ்வேர்ட்களை பயன்படுத்துவது நல்லது.
*உங்களுடைய பாஸ்வேர்டில் குறைந்தபட்சம் 20 கேரக்டர்கள் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். அப்பர் கேஸ், லோவர் கேஸ், ஸ்பெஷல் கேரக்டர், எண்கள், எழுத்துக்கள் போன்றவை அதில் இருக்க வேண்டும்.
*ஒரே பாஸ்வேர்டை பல அக்கவுண்டுகளுக்கு பயன்படுத்த கூடாது. ஏனெனில் ஒரு அக்கவுண்ட்டை ஹேக்கர் ஹேக் செய்துவிட்டால் உங்களுடைய பிற அக்கவுண்டுகளுக்கான அணுகலும் எளிதாக அவர்களுக்கு கிடைக்கும்.
*முடிந்தபோதெல்லாம் உங்களுடைய அக்கவுண்டுகளுக்கு மல்டி ஃபேக்டர் அல்லது டூ ஃபேக்டர் ஆதன்டிகேஷனை எனேபிள் செய்து வைக்கவும். ஒருவேளை ஹேக்கர் உங்களுடைய பாஸ்வேர்டை கண்டுபிடித்து விட்டாலும் கூட உங்களுடைய தகவல்களை பயன்படுத்துவதற்கு இது ஒரு கூடுதல் பாதுகாப்பு அடுக்காக செயல்படக்கூடும்.
*கடினமான பாஸ்வேர்ட்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது உங்களுக்கு சிரமமாக இருந்தால் நீங்கள் ஒரு பாஸ்வேர்ட் மேனேஜரை பயன்படுத்தலாம். இந்த மாதிரியான கருவிகள் உங்களுடைய அக்கவுண்டுகளுக்கு ஸ்ட்ராங் பாஸ்வேர்டுகளை உருவாக்கி தருவதோடு மட்டுமல்லாமல் அவற்றை சேமிக்கவும் உதவும்.
*தொழில் நடத்தி வருபவர்கள் தங்களுடைய ஊழியர்கள் பாஸ்வேர்ட் பாதுகாப்புக்கான சிறந்த பயிற்சியை மேற்கொள்கின்றனரா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம். வேலை சார்ந்த அக்கவுண்டுகளுக்கு எப்பொழுதும் தனித்துவமான, ஸ்ட்ராங் பாஸ்வேர்டுகளை பயன்படுத்த வேண்டும்.
உலகம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் இந்த சூழலில் ஆன்லைன் பாதுகாப்பு என்பது மிக தீவிரமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு விஷயம். எனவே ஸ்ட்ராங் பாஸ்வேர்ட், கூடுதல் பாதுகாப்பு அடுக்குகள் எப்பொழுதும் ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்யும்.