10 ரூபாயில் தினம் 2 GB டேட்டா... அறிவித்த ஜியோ - பயனர்கள் சந்தோஷம் !!

10 ரூபாயில் தினம் 2 GB டேட்டா... அறிவித்த ஜியோ - பயனர்கள் சந்தோஷம் !!

ஜியோ

கடந்த ஜூலை மாதத்தில், ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தை அதிகரித்தன. தனியார் நிறுவனங்கள் 15% வரை கட்டணத்தை உயர்த்தின. இதன் காரணமாக மலிவான திட்டங்களை வழங்கும் பிஎஸ்என்எல்லுக்கு பலர் மாறினர். அதன் பின்னர், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள ஜியோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது சில புதிய மலிவான ரீசார்ஜ் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றன.

ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டம் ரூ 999 கட்டணத்தில் பெறலாம். 98 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இதில் தினமும் 2ஜிபி டேட்டா வசதி, வரம்பற்ற அழைப்புகள் மேற்கொள்ளும் வசதி மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் அனுப்பு வசதி ஆகியவை கிடைக்கும். நீங்கள் ஜியோவின் 5ஜி நெட்வொர்க் பகுதியில் இருந்தால், வரம்பற்ற 5ஜி டேட்டாவையும் பெறலாம். இந்த திட்டத்தில் மொத்தமாக 196ஜிபி டேட்டா கிடைக்கும்.

ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டம் ரூ. 899 கட்டணத்தில் பெறலாம். 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இதில் தினமும் 2ஜிபி டேட்டா வசதி, வரம்பற்ற அழைப்புகள் மேற்கொள்ளும் வசதி மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் அனுப்பு வசதி ஆகியவை கிடைக்கும். இது தவிர, 5ஜி நெட்வொர்க் பகுதிகளில் 20ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் வரம்பற்ற டேட்டாவையும் பெறலாம். இந்த திட்டத்தில் மொத்தமாக 200ஜிபி டேட்டா கிடைக்கும்.

ரூ.899 மற்றும் ரூ.999 - இரண்டில் எந்த திட்டம் சிறந்தது என்று நீங்களே தேர்வு செய்யுங்கள்.

Tags

Next Story