ஜியோ சினிமா பிளானின் விலை அதிரடி குறைப்பு..!

ஜியோ சினிமா பிளானின் விலை அதிரடி குறைப்பு..!

ஜியோ சினிமா 

ஜியோ சினிமா ஓடிடி நிறுவனம் 89 ரூபாய் பிளானின் விலையை அதிரடியாக குறைத்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ ஜியோசினிமா பிரீமியம் குடும்பத் திட்டத்தில் ரூ.13 தள்ளுபடியை வழங்குகிறது.

தள்ளுபடிக்குப் பிறகு, ஜியோசினிமாவின் ரூ.89 திட்டம் ரூ.76க்கு ஜியோசினிமா ஆப் மற்றும் இணையதளத்தில் கிடைக்கிறது.

29 ரூபாய் பிரீமியம் மாதாந்திர திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

JioCinema Family Plan எவ்வாறு பெறுவது?

1.JioCinema ஆப் அல்லது இணையதளத்தைத் திறக்கவும்

2.பிரீமியம் பிரிவுக்குச் செல்லவும் அல்லது பிரீமியம் ஐகானைத் தட்டவும்

3.இது உங்களை லாகின் பக்கத்திற்கு திருப்பிவிடும்

4.உங்கள் JioCinema லாகின் தகவல்களை பயன்படுத்தி உள்நுழைக

5.இப்போது குடும்பத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும் (ஏற்கனவே தள்ளுபடி விலையை இங்கே பார்க்கலாம்)

6.அதன்பின் சந்தாவை செலுத்தி இப்போது ஜியோ சினிமா பார்த்து ரசிக்கவும்.

JioCinema Premium இல், HBO, Paramount மற்றும் பிற பிரீமியம் கன்டென்ட் உட்பட எந்த சாதனத்திலும் பிரத்யேக தொடர்கள், திரைப்படங்கள், ஹாலிவுட், குழந்தைகள் மற்றும் டிவி பொழுதுபோக்குகளை வாடிக்கையாளர்கள் ஸ்ட்ரீம் செய்யலாம்.

Tags

Next Story