ஜியோவுக்கு டப் கொடுத்த BSNL- 4G நெட்வொர்க் சேவையை உறுதிப்படுத்தியது !

ஜியோவுக்கு டப் கொடுத்த BSNL- 4G நெட்வொர்க் சேவையை உறுதிப்படுத்தியது !

BSNL

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ,ஐடியா உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்கள், இரு மாதங்களுக்கு முன்னர், தங்கள் மொபைல் கட்டணங்களை உயர்த்தியதன் விளைவாக, பல தொலைத்தொடர்பு சந்தாதாரர்கள் அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனத்திற்கு மாறத் தொடங்கியுள்ளனர்.

மலிவான கட்டணத்தில் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் BSNL நிறுவனத்தின் வாடிக்கையாளகள் எண்ணிக்கை சமீபத்தில் பெருமளவு அதிகரித்துள்ளது.

BSNL எடுத்துள்ள மிகப் பெரிய முயற்சியில், அதன் 4G நெட்வொர்க் சேவையை லடாக்கின் தொலைதூர பகுதிகளுக்கு விரிவுபடுத்தி சாதனை படைத்துள்ளது. 14,500 அடி உயரத்திற்கு தனது 4ஜி சேவையை விரிவுபடுத்தி சாதனை படைத்துள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4G நெட்வொர்க்கை அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மலாபுவிலிருந்து 14,500 அடி உயரத்தில் அமைந்துள்ள லடாக்கில் உள்ள ஃபோப்ராங் வரை நீட்டித்துள்ளது. தொலைத்தொடர்புத் துறை (DoT) BSNL 4G நெட்வொர்க் சேவை விரிவாக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு கடும் போட்டி கொடுக்கும் வகையில், பிஎஸ்என்எல் செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 4ஜி டவர்கள் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

2025 ஜூன் மாதத்திற்குள் 1 லட்சம் 4ஜி டவர்களை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில், நிதி உதவி செய்துள்ளது. மத்திய அரசு 6 ஆயிரம் கோடி ரூபாய் உதவி வழங்கி ஊக்கம் அளித்துள்ளதன் காரணமாக பிஎஸ்என்எல் மிக வேகமாக முன்னேறி வருகிறது.

Tags

Next Story