ஜியோவின் அசத்தல் திட்டம்!
ஜியோ
கால் செய்து கொள்ள மட்டும் ரீசார்ஜ் வேண்டும் என்றால், ரிலையன்ஸ் ஜியோவின் மூன்று மலிவான ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன.இதன் மூலம் வரம்பற்ற அழைப்பை செய்து கொள்ள முடியும். இதன் மூலம், தேவையில்லாமல் அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்வதை தடுக்க முடியும். உங்கள் தேவைக்கேற்ப இந்த திட்டங்கள் மூலம் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.
1.ரூ. 149 ரீசார்ஜ் திட்டம். இந்த திட்டம் மொத்தம் 20 நாட்கள் செல்லுபடியாகும். இதன் மூலம் தினமும் 1ஜிபி வரை டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், இதனுடன் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கும். அதே நேரத்தில், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் போன்றவற்றின் இலவச அணுகலையும் பெற முடியும்.
2.ரூ.179 மற்றும் ரூ.199 ஆகிய இரண்டு மலிவுத் திட்டங்களையும் ஜியோ வழங்குகிறது.
ஜியோவின் இந்த 179 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளர்கள் 1 ஜிபி வரை டேட்டா பயன்படுத்த முடியும். இதனுடன், அனைத்து நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற கால் அழைப்புகளை செய்து கொள்ளலாம். அதே நேரத்தில், இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் 100 இலவச எஸ்எம்எஸ் செய்து கொள்ளலாம். மொத்தமாக இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு 24 ஜிபி டேட்டா கிடைக்கும். இது மட்டுமல்லாமல், ஜியோ சினிமா, ஜியோ கிளவுட், ஜியோ டிவி மற்றும் பிற ஜியோ பயன்பாடுகளின் இலவச சந்தா உள்ளிட்ட பல நன்மைகளைப் பெறுவீர்கள்.