Blaze Duo 5G அறிமுகப்படுத்தியுள்ள லாவா நிறுவனம்!

Blaze Duo 5G அறிமுகப்படுத்தியுள்ள லாவா நிறுவனம்!

Blaze Duo 5G 

லாவா நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் பிளேஸ் டியோ 5ஜி (Blaze Duo 5G) என்ற புதிய மொபைலை அறிமுப்படுத்தி உள்ளது. இந்தியாவில் ரியர் பேனலில் அமைந்துள்ள செகன்டரி டிஸ்ப்ளேவுடன் வரும் லேட்டஸ்ட் ஸ்மார்ட் ஃபோன் இதுவாகும். இந்த மொபைல் 6nm MediaTek Dimensity 7025 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 14 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் இயங்குகிறது.

இந்தியாவில் Lava Blaze Duo 5G மொபைலின் பேஸ் மாடலின் விலை ரூ.18,999-ல் தொடங்குகிறது.6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் உள்ளது.8GB ரேம் வேரியன்டின் விலை ரூ.20,499-க்கு.ஆர்க்டிக் ஒயிட் மற்றும் செலஸ்டியல் ப்ளூ உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. டிசம்பர் 20 முதல் இந்திய வாடிக்கையாளர்கள் Lava Blaze Duo 5G மொபைலை வாங்கலாம்.

அதுமட்டுமில்லாமல் அமேசானில் மிக குரைந்த தள்ளுபடியில் இதனை வாங்கலாம்... 6GB ரேம்+ 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ.16,999-க்கும்,8GB ரேம்+128GB ரேம் வேரியன்ட் ரூ.17,999-க்கும் கிடைக்கும். இந்த மொபைல் 6.67-இன்ச் ஃபுல்-HD+ 3D கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உள்ளது, இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 394ppi பிக்சல் டென்சிட்டியை கொண்டுள்ளது.

இந்த மொபைலின் ரியர் பேனலில்1.58-இன்ச் (228x460 பிக்சல்கள்) AMOLED ஸ்கிரீன் உள்ளது, இது 336ppi பிக்சல் டென்சிட்டியை கொண்டுள்ளது. லாவா நிறுவனம் இந்த மொபைலில் 6nm ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 ப்ராசஸரை கொடுத்துள்ளது. இது 8GB வரையிலான LPDDR5 RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் Blaze Duo 5G மொபைலில் அதிகபட்சமாக 128GB UFS 3.1 ஸ்டோரேஜை கொண்டுள்ளது.சோனி சென்சார் கொண்ட 64MP பிரைமரி ரியர் கேமராவும் கூடவே 2MP செகண்டரி கேமராவும் உள்ளது.

மொபைலின் முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.இந்த மொபைலில் உள்ள கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் 5G, 4G LTE, Wi-Fi, ப்ளூடூத் 5.2, GPS மற்றும் USB டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். இதில் ப்ராக்ஸிமிட்டி சென்சார், கைரோஸ்கோப், இ-காம்ப்பஸ் மற்றும் ஒரு ambient லைட் சென்சார் ஆகியவையும் உள்ளது.மேலும் ஸ்டோரேஜை மெமரி கார்டைப் பயன்படுத்தி விரிவாக்கி கொள்ள முடியாது.

Tags

Next Story