Lenovo Tab M11! கவர்ச்சிகரமான அம்சத்துடன்!!

Lenovo Tab M11! கவர்ச்சிகரமான அம்சத்துடன்!!

லெனோவா டேப் எம்11 

லெனோவா டேப் எம்11 என்ற பெயரில் புதிய டேப்லெட்டை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.11-இன்ச் அளவிலான டிஸ்ப்ளே, குவாட் ஸ்பீக்கர்கஸ் மற்றும் 13MP ரியர் கேமரா உள்ளிட்ட பல அம்சங்களை இந்த புதிய Lenovo Tab M11 கொண்டுள்ளது. புதிய லெனோவா டேப் எம்11 ஆனது மொத்தம் 2 கனெக்டிவிட்டி வேரியன்ட்ஸ்களில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.Tab M11-ன் வைஃபை ஒன்லி வேரியன்ட்டின் விலை ரூ.17,999 ஆகும்.இது 8GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டிருக்கிறது. புதிய Tab M11-ஆனது 90Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 400nits பீக் பிரைட்னஸூடன் கூடிய 11-இன்ச் WUXGA (1920 x 1200 பிக்சல்ஸ்) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.இந்த டேப்லெட் Mali G52 GPU உடன் இணைக்கப்பட்ட MediaTek Helio G88 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் உள்ளதால் ஸ்டோரேஜை 1TB வரை விரிவாக்கி கொள்ளலாம்.பின்பக்கம் 13MP ரியர் கேமராவும் முன்பக்கம் 8MP ஃப்ரன்ட் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. 7,040mAh பேட்டரியை கொண்டுள்ளது.Android 13-ல் இயங்கும் இந்த டேப்லெட்டிற்கு 2 வருட OS அப்டேட்ஸ் மற்றும் 4 வருட செக்யூரிட்டி பேட்ச் அப்டேட்ஸ் வழங்கப்படும்.மொத்த எடை 465 கிராம் ஆகும்.

Tags

Next Story