டிசம்ப 1ம் தேதி முதல் புதிய OTP முறை அமலுக்கு வருகிறது - சைபர் மோசடி குறைக்க TRAI எடுக்கும் நடவடிக்கை !!
TRAI
டிஜிட்டல் யுகத்தில், நமது வேலைகள் பல மிகவும் எளிதாகி விட்டாலும், சைபர் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பணத்தை ஆன்லைன் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இதனை தடுக்கும் வகையில் TRAI முக்கிய நடவடிக்கையை மேற்கண்டுள்ளது.
இணையம் மற்றும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், பல வகையான ஆபத்துகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. ஸ்மார்ட்போன்கள் நமது கடினமான பணிகளை எளிதாக்கியது ஒரு பக்கம் இருந்தாலும், மோசடி செய்பவர்கள் மற்றும் சைபர் குற்றவாளிகளுக்கு ஏமாற்றுவதற்கான சிறந்த வழியையும் வழங்கியுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) சமீப காலங்களில் மோசடிகள் மற்றும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில், ஆன்லைன் மோசடியைத் தடுக்க டிரேசபிலிட்டியை செயல்படுத்துமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI அறிவுறுத்தியது. வணிகச் செய்திகள் மற்றும் OTP One-Time Passwords தொடர்பாக அதனை கண்காணிக்கும் வகையில், டிரேசிபிலிட்டி விதிகளை நடைமுறைப்படுத்த TRAI ஆகஸ்ட் மாதம் அறிவுறுத்தல்களை வழங்கியது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு OTP மெசேஜ் டிரேசபிலிட்டியை செயல்படுத்த TRAI அக்டோபர் 31 வரை அவகாசம் இருந்தது. அனைத்து தொலைத்தொடர்பு நிறுவங்களுக்கும் அதன் காலக்கெடுவை நவம்பர் 31 வரை நீட்டித்துள்ளது. இப்போது அதன் காலக்கெடு நவம்பரில் முடிவடைய உள்ளது. இனி, டிசம்ப 1ம் தேதி முதல், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வணிகச் செய்திகள் மற்றும் OTP செய்திகளைக் கண்காணிக்க ட்ரேசபிலிட்டி விதியை அமல்படுத்த வேண்டும் என TRAI வலியுறுத்தி உள்ளது.