வந்தாச்சு!! வந்தாச்சு!! புதிய பல்சர் வந்தாச்சு!!

வந்தாச்சு!! வந்தாச்சு!! புதிய பல்சர் வந்தாச்சு!!

 பல்சர் என்எஸ்160 

பஜாஜ் நிறுவனம் பல்சர் சீரிஸில் இரண்டு புதிய பைக்குகளை ஒன்றாக அறிமுகப்படுத்தியுள்ளன.ஒரே நேரத்தில் பல்சர் என்எஸ்160 மற்றும் பல்சர் என்எஸ்200 ஆகியவற்றை முற்றிலும் புதிய அவதாரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.பஜாஜ் இரண்டு பைக்குகளிலும் புதிய எல்இடி ஹெட்லைட் அமைப்பை வழங்கியுள்ளது. இவற்றில் LED பகல்நேர விளக்குகள் (DRL's) கொடுக்கப்பட்டுள்ளன. பஜாஜ் ஆட்டோ இரண்டு பைக்குகளிலும் ஒரு புதிய டிஜிட்டல் டிஸ்ப்ளேவை வழங்கியுள்ளது. அவற்றின் கருவி கன்சோலில் ஸ்பீடோமீட்டர், ஆர்பிஎம் மீட்டர், ஓடோமீட்டர், எரிபொருள் நிலை மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்பு போன்ற அம்சங்கள் உள்ளன. NS 160 மற்றும் NS 200 -ல், ஸ்மார்ட்போன் இணைப்புடன் அழைப்பு அல்லது செய்தி அறிவிப்பு வசதியையும் இதில் வழங்கப்படுகிறது. அதாவது பைக் ஓட்டும் போது வார்னிங் மெசேஜ்களும் உங்களுக்கு கிடைக்கும்.இதில் 17 இன்ச் வீல்களை நிறுவனம் வழங்கியுள்ளது.புதிய ஸ்டைல் ​​மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் கூடிய பல்சர் என்எஸ்160 -ன் ஆரம்ப விலை ரூ.1.46 லட்சமாகவும், பல்சர் என்எஸ்200யின் விலை ரூ.1.57 லட்சமாகவும் (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story