இந்த பிளானில் இனி வரம்பற்ற டேட்டா கிடையாது - பிஎஸ்என்எல் !
பிஎஸ்என்எல்
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் குறிப்பிட்ட பிளானில் இதுவரை வழங்கப்பட்டு வந்த வரம்பற்ற டேட்டா இப்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையில் அதிக பலன்களை தரும் ரீசார்ஜ் திட்டங்களை தருகிறது.இந்நிலையில், அதன் பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு அதிர்ச்சியை அளித்துள்ளது.பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை வழங்கி வந்த இரவு முழுவதும் வரம்பற்ற டேட்டா சேவை என்பது குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டத்திற்கு நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது, பிஎஸ்எனஎல் நிறுவனத்தின் ரூ.599 ரீசார்ஜ் திட்டத்தில்தான் ஜியோ இந்த சேவையை நிறுத்தி உள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.599 ரீசார்ஜ் திட்டம்!!
84 நாள்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தினமும் வாடிக்கையாளர்களுக்கு 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 84 நாள்கள் வேலிடிட்டியில் மொத்தம் 252ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். தினந்தோறும் டேட்டா லிமிட் முடிந்ததும் இணைய வேகம் 40Kbps ஆக குறையும். இந்த திட்டத்தில் வரம்பற்ற வாய்ஸ் காலிங் உள்ளது. மேலும், 100 இலவச எஸ்எம்எஸ் தினமும் வழங்கப்படுகிறது. Zing, PRBT, Astrocell ஆகியவை கூடுதல் நன்மையாக வழங்கப்படுகிறது.இந்த திட்டத்தில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற இணைய சேவை வழங்கப்பட்டது. ஆனால், இந்த சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.