நோக்கியா 3210 புதிய மொபைல் இந்தியாவில் அறிமுகம்!

நோக்கியா 3210 புதிய மொபைல் இந்தியாவில் அறிமுகம்!

நோக்கியா 3210

கீபேட் மொபைலில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திய நோக்கிய, இப்போது புதிதாக நோக்கியா 3210 மொபைல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நோக்கியா 3210 4ஜி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 4ஜி மொபைல் என்பது புதிய ஃபீச்சர் போன். தற்போது லேட்டஸ்ட் அப்டேட்டுடன் இந்தியா வந்துள்ளது.

இந்த போன் அமேசான் இந்தியாவில் 3,999 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.UPI சேவையும் இதில் உள்ளது, இதன் உதவியுடன் பயனர்கள் QR Code ஸ்கேன் செய்தும் பணம் செலுத்தலாம்.இது 4G ஆதரவு மற்றும் பின்புற பேனலில் கேமரா சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.இந்த போன் Scuba Blue, Grunge Black மற்றும் Y2K Gold ஆகிய மூன்று வண்ண வகைகளில் வருகிறது.

இதில் Youtube, YouTube Shorts, News மற்றும் Games போன்ற ஆப்ஸ் உள்ளது. இதில் கிளாசிக் கேம் பாம்பு விளையாட்டை நிறுவனம் சேர்த்துள்ளது. இந்த போனில் 64MP ரேம் உள்ளது. இதில் 128MB சேமிப்பு உள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டின் உதவியுடன், நீங்கள் 32 ஜிபி வரை கார்டைச் செருகலாம்.

Nokia 3210 4G ஆனது 2MP பின்புற கேமரா சென்சார் கொண்டது, இது LED ஃபிளாஷ் லைட்டுடன் வருகிறது. இது 1,450mAh நீக்க முடியாத பேட்டரியைக் கொண்டுள்ளது. ஒரு முழு சார்ஜில் 9.8 மணிநேர டாக்டைம் பேக்அப்பை தருவதாக நிறுவனம் கூறுகிறது. இந்த போன் 62 கிராம் எடை கொண்டது.

Tags

Next Story