இன்பினிக்ஸ் வெளியிட்ட நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் !!

இன்பினிக்ஸ் வெளியிட்ட நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் !!

இன்பினிக்ஸ்

இன்பினிக்ஸ் நிறுவனம் நோட் 40 சீரிஸ் ஸ்மார்ட் ஃபோன்களை வெளியிட்டுள்ளது. நோட் 40 5g ,நோட் 40 ப்ரோ ,நோட் 40 ப்ரோ 5 ஜி மற்றும் நோட் 4 பிளஸ் 5g ஆகிய புதிய டிசைன் கொண்ட செல்போன்களை வெளியிட்டுள்ளது.

இன் பினிக்ஸ் நோட் 40 சுமார் 17,400 அளவில் விற்பனை ஆகிறது. நோட் 40 5g 21 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், நோட் 40 ப்ரோ 4ஜி 23 ஆயிரத்து 300 ரூபாய்க்கும், நோட் 4 ப்ரோ 5ஜி 25 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதில் இருக்கும் சிறப்பம்சங்கள் உலக அளவில் தற்போது மார்க்கெட்டில் கிடைக்கும் அனைத்து ஹெட்போன்களையும் இந்த புதிய டிசைன் செல்போன்களில் பயன்படுத்தலாம்.

நோட் 40 சீரிஸ் போன்கள் இந்த வருடம் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட போன்களில் இருந்து எந்த மாற்றமும் இல்லை அவற்றின் டிசைன் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. இது விங் ஆப் ஸ்பீடு டிசைனுடன் சில்வர் கலரை கொண்டது.

இன்பினிக்ஸ் நோட் 40, நோட் 40 ப்ரோ MediaTek Helio G99 SoCs-ஐ கொண்டுள்ளது. நோட் 40 மற்றும் நோட் ப்ரோ போன்கள் 5,000mAh பேட்டரிகளை கொண்டுள்ளது. ப்ரோ பிளஸ் 4,600mAh பேட்டரியை கொண்டுள்ளது. நோட் 40 ப்ரோபிளஸ் 100W wired பாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும்.

Tags

Next Story