எங்கும் ஏ.டி.எம்.! உருவான கதை தெரியுமா?

எங்கும் ஏ.டி.எம்.! உருவான கதை தெரியுமா?

 ஏ.டி.எம்

இன்று டெலிபோன் பூத், டீக்கடைகள் மாதிரி ஏ.டி.எம். தன் மையங்கள் பெருகிவிட்டன. இமாநகர், நகர்ப் புறங்களைக் கடந்து சிறிய சிறிய நகரங்களிலும் ஏ.டி.எம். மையங்கள் முளைத்துவிட்டன. எல்லாவற்றுக்கும் காரணம் கால மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவைதான். இந்த ஏ.டி.எம். கேர் எந்திர வசதியைக் கண்டறிந்தவர் யார்? எப்போது முதல் இது பயன்பாட்டுக்கு வந்தது?

முதலில் ஏ.டி.எம். என்றால் என்ன? எந்த நேரமும் பணத்தை எடுத்துக்கொள்ள உதவும் எந்திரம் என்றுதான் மேலோட்டமாக, பெருவாரியாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமே விளக்கமல்ல. ஏ.டி.எம். என்றால் 'ஆட்டோமேடிக் டெல்லர் மெஷின்' (Automatic

அதாவது, இந்த எந்திரங்களை வங்கிகள் வைத்து - இயக்குகின்றன. வங்கிகளின் இந்த எந்திரம், தனது வாடிக்கையாளரை அவர் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது. அந்த வங்கிக்கு உலக அளவில் எங்கெல்லாம் ஏ.டி.எம். மையம் இருக்கிறதோ அங்கெல்லாம் பணம் எடுக்கவும், போடவும் வங்கி நடவடிக்கைகள் சாத்தியமாகிறது.

முதல் வெற்றிகரமான மற்றும் நவீன ஏ.டி.எம். எந்திரம் அமெரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எந்திரத்தை உருவாக்கியவர் டான் வெட்சில் என்ற அமெரிக்கர். ஆனாலும் அதற்கு முன்பே 1939-இல் லூதர் ஜார்ஜ் சிம்ஜியான் என்பவர் ஏ.டி.எம். என்ற கோட்பாட்டைக் கொண்டு வந்தார். அத்துடன் எந்திரத்தையும் உருவாக்கினார். ஆனால் அந்த எந்திரத் திட்டம் வெற்றி பெறவில்லை. நடைமுறைக்கும் வரவில்லை.

டான் வெட்சில் இந்த எந்திரத்தை உருவாக்கக் காரணம் என்னவென்றால், தான் கணக்கு வைத்திருந்த ஒரு வங்கியில் பணம் பெற, வெகு நேரமாக வரிசையில் காத்திருந்தார் டான் வெட்சில். அவருக்கோ அவசரமாக பணம் எடுக்கவேண்டிய சூழ்நிலை. ஆனால் வங்கியில் வாடிக்கையாளர் கூட்டம். நேரம்ஆக ஆக அவருக்கு வெறுப்பு உண்டானது. அந்த நேரத்தில்தான் இதுபோன்று காத்திராமல் பணம் பெற, போட ஒரு தானியங்கி எந்திரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உதயமானது.

அந்த எண்ணத்தை வலிமையாக்கி, வளர்த்து உருவாக்கியதுதான், ஏ.டி.எம். எந்திரம். அப்போது (1968) டான் வெட்சில், 'டாக்குடெல்' என்ற நிறுவனத்தின் பொருள் திட்டப்பிரிவின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். தானியங்கியைக் கையாளும் எந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனமாக இருந்ததுதான் டாக்குடெல். அதே நிறுவனத்தில் தலைமை மெக்கானிக்கல் எஞ்ஜினியராக இருந்த 'டாம் பார்னஸ்', எலக்ட்ரிக்கல் எஞ்ஜினியராக இருந்த 'ஜார்ஜ் சபாஸ்டியன்" ஆகிய இருவருக்கும் கூட ஏ.டி.எம். எந்திரம் உருவாக்கியதில் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. இவர்கள் இருவரும் ஏடி.எம். கண்டுபிடிப்பதில் டான் வெட்சிலுடன் இணைந்து பணியாற்றினர். ஏ.டி.எம். உருவாக்க 5 மில்லியன் டாலர் செலவானது, நவீன ஏ.டி.எம். உருவாக்க வேண்டும் என்ற இந்தத் திட்டம் 1968-இல் தொடங்கியது. 1969-இல் வெற்றிகரமாக பணி முடிந்தது. 1973-இல் டாக்குடெல் என்ற அந்த நிறுவனம் ஏ.டி.எம். எந்திரத்துக்கான காப்புரிமை பெற்றது.

செயல்படத் தொடங்கிய முதல் ஏ.டி.எம். எந்திரம் நியுயார்க் நகரை அடிப்படையாகக்கொண்ட ஒரு கெமிக்கல் வங்கியில் பொருத்தப்பட்டது. ஏ.டி.எம். எந்திரங்கள் முதலில் செயல்படத் தொடங்கிய நேரத்தில், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள் அந்த ஏ.டி.எம். எந்திரங்களோடு இணைக்கப்படாமல் இருந்தன. ஆகையால், வங்கிகள் தங்களது குறிப்பிட்ட, மிக முக்கிய வாடிக்கையாளர்களின் இடத்தில் மட்டும் இந்த ஏ.டி.எம். வசதியைச் செய்திருந்தது. அதுவும் கடன் அட்டை (கிரெடிட் கார்டு) வைத்திருந்தோர் மட்டும் அந்த ஏ.டி.எம். எந்திரத்தைப் பயன்படுத்த முடிந்தது. ஏ.டி.எம். அட்டைக்கு முன்பு கடன் அட்டைகள் பயன்படுத்தப்பட்டன.

வெட்சிலும் அவரது கூட்டாளிகளான பார்னஸ் மற்றும் சபாஸ்டியனும் இணைந்து வெற்றிகரமான முதல் ஏ.டி.எம். அட்டைகளை உருவாக்கினர். அந்த அட்டை மூலம் பணம் பெற, அந்த அட்டையில் ஒரு காந்தக்கோடும். ரகசிய குறியீட்டு எண்ணும் இருந்தன. கடன் அட்டையிலிருந்து ஏ.டி.எம். அட்டை வேறுபட்டு இருக்க வேண்டிய காரணத் தாலும், ஏ.டி.எம். அட்டை பின்னாளில் காந்தக்கோடு இல்லாமல் உருவாக்கப்பட்டது.

Tags

Next Story