புதிய டேட்டா பேக் சலுகை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் !!

புதிய டேட்டா பேக் சலுகை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் !!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக புதிய ரீசார்ஜ் பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

மொபைல் போன் பயனர்களின் முக்கிய தேவைகளில் ஒன்றாக டேட்டா இருக்கிறது. நமது பணிகள் அனைத்தும் இணையத்தை சார்ந்து உள்ளன. சில சமயங்களில் தினசரி டேட்டா வரம்பு தீர்ந்து போய், நமக்கு சிக்கல்களை உண்டாக்கலாம். அத்தகைய சமயத்தில், டேட்டா ஒன்லி அல்லது பூஸ்டர் போக்குகள் போன்ற டேட்டா திட்டங்கள் கை கொடுக்கும்.

இந்த திட்டத்தில், 10 ஜிபி டேட்டா வெறும் 11 ரூபாய்க்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் 4G டேட்டா கிடைக்கும். ஜியோ (Relainace Jio) அறிமுகப்படுத்திய புதிய திட்டத்தை உங்கள் வழக்கமான திட்டத்துடன் சேர்த்து பயன்படுத்தலாம். தினசரி வரம்பு தரவு தீர்ந்துவிட்டால், பயனர்கள் இந்த பேக்கைப் பயன்படுத்தலாம்.

இதை ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்கள் இருவரும் பயன்படுத்தலாம். போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு ரூ.11க்கு 10 ஜிபி டேட்டாவும் வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை MyJio ஆப் அல்லது ஜியோ இணையதளத்தில் இருந்து ரீசார்ஜ் செய்யலாம். ₹49 ரீசார்ஜ் திட்டம் வரம்பற்ற 4ஜி டேட்டா, ஒரு நாள் வேலிடிட்டி கொண்டது. ₹175 திட்டம் 10ஜிபி டேட்டா மற்றும் 10 OTT செயலிகளுக்கான அணுகல், 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. ₹219 திட்டம் 30 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. ₹359 திட்டம் 50ஜிபி டேட்டா, நாட்கள் வேலிடிட்டி கொண்டது.

Tags

Next Story