தேதி வாரியாக மெசேஜ்களை நீங்கள் எடுக்கலாம் !!! WhatsApp !!
வாட்ஸ் அப்
பழைய மெசேஜ்களை ஈஸியாக கண்டுபிடிக்க வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சம் அறிமுகம்...வாட்ஸ்அப்பில் பழைய செய்திகளைத் தேடுவதை மெட்டா இப்போது மிகவும் எளிதாக்கியுள்ளது. லேட்டஸ்ட் அப்டேட் மூலம், யூசர்கள் தேதியை கொடுத்து WhatsApp -ல் குறிப்பிட்ட செய்தி அல்லது மீடியாவைத் தேடலாம். குறிப்பிட்ட தேதியை மட்டும் தேர்வு செய்து, தேவையான செய்தியை தேடிக் கொள்ளும் வகையில் புதிய அப்டேட் மேம்படுத்தப்பட்டுள்ளது.
WhatsApp செய்தியைத் தேடுவது எப்படி?
சாட்டிங் அல்லது குழுவிற்குச் சென்று search என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஆண்ட்ராய்டு ஃபோன்களில், மேல் வலது மூலையில் ஒரு காலெண்டர் ஐகானைக் காண்பீர்கள். ஐபோனில் கீழ் வலது மூலையில் இந்த காலண்டர் ஐகான் இருக்கும். இந்த காலண்டர் ஐகானைக் கிளிக் செய்து, தேதியைத் தேர்ந்தெடுக்கவும், குறிப்பிட்ட தேதியிலிருந்து வரும் செய்திகளுக்கு WhatsApp உங்களை அழைத்துச் செல்லும்.