ஒரே நாளில் டெலிவரி | பிளிப்கார்ட்டின் அசத்தல் திட்டம்!

ஒரே நாளில் டெலிவரி | பிளிப்கார்ட்டின் அசத்தல் திட்டம்!

பிளிப்கார்ட்

பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் பல ஆண்டுகளாக இந்தியாவில் அதன் சேவையை வழங்கி வருகிறது. மொபைல் போன்கள் தொடங்கி, வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் தற்போது ஆன்லைனில் டெலிவரி செய்து வருகிறது. ஆன்லைன் தளங்களில் பொருட்களை ஆர்டர் செய்தால் நமது பகுதிக்கேற்ப நான்கு நாட்கள் முதல் 10 நாட்கள் வரை நேரம் எடுத்துக் கொள்ளும். இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி காலையில் ஆர்டர் செய்தால் அன்று இரவுக்குள் வீட்டிற்கு அந்த குறிப்பிட்ட பொருட்கள் டெலிவரி செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. ஒரே நாளில் டெலிவரி வேண்டும் என்று நினைக்கும் பொருள்களை மதியம் 12 மணிக்குள் ஆர்டர் செய்ய வேண்டும். அந்த ஆர்டர் அன்று இரவு 12 மணிக்குள் வாடிக்கையாளர்களின் கைகளுக்கு போய் சேரும்" என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக அகமதாபாத், பெங்களூர், புவனேஷ்வர், கோயம்புத்தூர், சென்னை, டெல்லி, கவுகாத்தி, ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, லூதியானா, மும்பை, நாக்பூர், புனே, பாட்னா, ராய்ப்பூர், சிலிகுரி மற்றும் விஜயவாடா. உட்பட 20 நகரங்களில் இந்த திட்டம் கொண்டுவர பட உள்ளது. இதற்காக தற்போது சுமார் 22,000 பணியாளர்களை புதிதாக பணிக்கு எடுத்துள்ளது. அமேசான் நிறுவனம் இந்த சேவையை ஏற்கனவே கொடுத்து வருகிறது. பிரைம் கஸ்டமர்களுக்கு மட்டும் தற்சமயம் உடனடி டெலிவரி சேவை வழங்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story