ஐபிஎல் பார்ப்பது எப்படி? இதோ சூப்பர் பிளான்கள்!

ஐபிஎல் பார்ப்பது எப்படி? இதோ சூப்பர் பிளான்கள்!

ஐபிஎல்

ஐபிஎல் 2024 தொடர் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில், ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாஃபோன் ஐடியா யூசர்கள், இந்த கிரிக்கெட் திருவிழாவை பார்க்க இருக்கும் சூப்பர் ரீச்சார்ஜ் பிளான்கள்.

இந்த ஐ.பி.எல் 2024 சீசனுக்கு டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் பார்ட்னராக ஜியோ சினிமா உள்ளது. கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் ஜியோ சினிமா பயனர்களுக்கு இலவச ஸ்ட்ரீமிங் செய்கிறது.

இந்நிலையில், செயலிக்கான ஸ்ட்ரீமிங் இலவசமாக இருந்தாலும் டேட்டா பயன்படுத்த வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன.

ஜியோ ஐ.பி.எல் ப்ளான்

ஜியோ இரண்டு கிரிக்கெட் திட்டங்கள் உள்ளது. ரூ.444 திட்டம் மொத்தம் 100 ஜிபி டேட்டாவை 60 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ரூ.667 திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் மொத்தம் 150 ஜிபி டேட்டாவை கொடுக்கும். இந்தத் திட்டங்களில் டேட்டா பலன்கள் மட்டுமே அடங்கும். ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 3 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற 5ஜி டேட்டா ஆகியவை வழங்குகிறது. ஜியோவின் இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது மற்றும் மாதத்திற்கு ரூ.333 செலவாகும்.

ஏர்டெல் திட்டம்

ஏர்டெல்லின் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்தத் திட்டம் ஐபிஎல் 2024 சீசன் முழுவதும் நீடிக்கும். போனஸாக, இந்த திட்டம் ஒரு இலவச பிரைம் வீடியோ சந்தா மற்றும் அன்லிமிடெட் இலவச 5ஜி டேட்டாவை கொடுக்கும்.

வி.ஐ திட்டம்

வி.ஐ-ன் ரூ.699 ரீசார்ஜ் திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. நாளொன்றுக்கு இன்னும் அதிகமான டேட்டாவை நீங்கள் விரும்பினால், ரூ.475 திட்டத்தைத் தேர்வு செய்யவும். இது ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டாவை வழங்குகிறது ஆனால் வேலிடிட்டி 28 நாட்கள் மட்டுமே.

Tags

Next Story