விமானத்தை முதலில் கண்டுபிடித்த ஜெர்மானியர்!
விமானம்
விமானம் கண்டு பிடிக்கப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேலானாலும், விமானம் கண்டு பிடிப்பு தொடர்பான இன்னும் ஒருசில விஞ் ஞானிகளையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த ஒருசிலரில் ஒருவர் ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் ஜாதோ.
கார்ல் ஜாதோ அமெரிக்காவின் ரைட் சகோதரர்கள் அளவுக்கு பிரபலம் அடையவில்லை. ஆனாலும் அவர் முதல் விமானத்தை (எஞ்ஜின் மூலம் இயங்கும் விமானம் - Powered Flight) கண்டுபிடித்தவர். அதுவும் ரைட் சகோதரர்கள் விமானம் கண்டுபிடித்தற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே அந்த சாதனை கண்டுபிடிப்பு நிகழ்ந்தும் 100 ஆண்டுகள் ஆகிறது அல்லவா? அதையொட்டி கார்ல் ஜாதோவின் சொந்த ஊரான ஹேனோவரில் (ஜெர்மனி) தற்போதும் நூற்றாண்டு கொண்டாட்டம் நடக்கிறது.
ஹேனோவர் அரசு ஊழியரான கார்ல் ஜாதோ ஒரு கண்டுபிடிப்பாளராகவும் விளங்கினார். தானே சொந்தமாகத் தயாரித்த பறக்கும் எந்திரத்தை - சுமார் 60 அடி உயரம் பறக்கும் விமானத்தை ஹேனோவர் பகுதியில், தனது சாட்சியாக நான்கு பேர் முன்னிலையில் வெற்றிகரமாகப் பறக்கவிட்டுக் காட்டினார். அந்த நிகழ்வு சரியாக 1903-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் நாள் நடந்தது. அதன்பிறகு கழித்து, ஜாதோ அந்த பறக்கும் எந்திரத்தின் செயல்பாட்டை இன்னும் மேம்படுத்தி, 262 அடி உயரத்துக்கு பறக்க வைத்தார். ஜாதோ பறக்கும் பயிற்சி பற்றி பள்ளி ஒன்றையும், விமானம் வடிவமைக்கும் நிறுவனம் ஒன்றையும் நிறுவ ஆசைப்பட்டார். ஆனால் அந்த இரு ஆசைகளும் திறைவேறாமல் போனது. 1933-ஆம் ஆண்டில் ஜாதோ மரணமடைந்தார்.