எக்ஸ்ரே உருவான கதை தெரியுமா!
எக்ஸ்ரே
'எக்ஸ்ரே'யைக் கண்டு பிடித்தவர் 'வில்ஹெம் ரோண்ட்ஜென்' ஆவார். இவர் மருத்துவர், இயற்பியலாளர், புகைப்படக் கலைஞர், பேராசிரியர் எனப் பன்முக வித்தகர் என்றால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இவர் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் 'எக்ஸ்ரே'யைக் கண்டறிந்தார்.
'வில்ஹெம் ரோண்ட்ஜென்' 1895-ஆம் ஆண்டில் எக்ஸ்ரேயைக் கண்டறிந்தார். அடிப்படையில் இவர் ஓர் இயற்பியல் நிபுணர். புகைப்படக் கலையிலும் ஆர்வம் மிகுந்தவர்.
இவர் ஜெர்மனி பல்கலைக்கழகத்தில் இயற்பி பணியாற்றிக்கொண்டிருந்தபோது பேராசிரியராகப் ஒருநாள் தனது ஆய்வுக்க (தாலல் வரிக் கிரணிய முகம் வருநாய் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். அந்த மின்னொம் பாயும்போது ஆய்வுக்கூடத்திலிருந்த ஒரு 'ஃப்ளோரசென்ட பாரை ஒளிரத் தொடங்கியது. ரோண்ட்ஜெனுக்குத் முடியவில்லை. கண்ணையே தன்னால் நம்ப அது உண்மைதான் என்பதைக் கண்டறிய மீண்டும் ஒருமுறை அந்த மின்னொளியைப் பாய்ச்சினார். அப்போதும் அந்தத திரை ஒளிர்ந்தது.
ஒளிரும் அந்தத் திரையின் முன்னால் அவர் பல்வேறு பொருட்களைக் கொண்டு சென்றார். அப்போது அந்த ஒளிக்கதிர்கள் துணிகள் மற்றும் மரக்கட்டை போன்ற பொருட்களின் வழியேயும் ஊடுருவிச் செல்வதைக் கண்டறிந்தார்.
மற்றொரு நாள், அவர் அந்த ஒளிரும் திரை முன் தன் கையைக் காட்ட... குழாயிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் அவர் கையையும் ஊடுருவி திரையில் கையின் பிம்பத்தை விழச்செய்தது.அந்த நிழலில் கைக்குள் இருக்கும் எலும்புகளின் நிழலும் தெரிந்தது. ரோண்ட்ஜெனுக்குப் பயங்கர வியப்பு. தன் கையை மெல்ல நகர்த்தியபோது திரையில் தெரிந்த நிழலும் மெல்ல நகர்ந்தது.
அந்த நிழல்தான் முதல் எக்ஸ்ரே படமாக ஆனது ரோண்ட்ஜென் அந்த நிழற்படத்தை 'எக்ஸ் ரேடியேஷன் என்று அழைத்தார். மருத்துவ அறிவியல் துறையில் புரட்சிகளை ஏற்படுத்திய மிக முக்கிய கண்டுபிடிப்புகளில் எக்ஸ்ரே-யும் ஒன்று.
எக்ஸ்ரே-யின் பயன்கள்
எக்ஸ் கதிர்கள், பெரிய எந்திரங்களின் உள்ளிருக்கும் குறைபாடுகளைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகின்றன.
விண்வெளி ஆய்வில் அசாதாரண வளர்ச்சியை எக்ஸ்ரே நுண்ணோக்கிகள் சாதித்துள்ளன.
நம் அன்றாட வாழ்வில், விமான நிலையம் உள்ளிட்ட பாதுகாப்பு தேவைப்படும் பகுதிகளில் எக்ஸ்ரே நுண்ணோக்கிகள் பெரும் பங்கு வகிக்கின்றன.
இப்படி இங்கே குறிப்பிடப்பட்டவை போக, இன்னும் நிறைய பயன்கள் எக்ஸ்ரேயினால் கிடைத்து வருகின்றன. இவை யாவும் கிட்டத்தட்ட ஒரு 100 ஆண்டுகளுக்கு முன்பு ரோண்ட ஜென் ஆய்வகத்தில் திடீரென நிகழ்ந்த ஓர் அறிவியல் அதிசயத்தினால்தான் என்பதை மறுக்க முடியாது.