ரீசார்ஜ் திட்டத்தில் கட்டணத்தை உயர்த்தாமல் வேலிடிட்டியை அமைதியாக குறைத்த வோடபோன் - மக்கள் அதிருப்தி !!

ரீசார்ஜ் திட்டத்தில் கட்டணத்தை உயர்த்தாமல் வேலிடிட்டியை அமைதியாக குறைத்த வோடபோன் - மக்கள் அதிருப்தி !!

வோடபோன்

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்கள், இரு மாதங்களுக்கு முன்னர் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில், வாடிக்கையாளர்கள் பலர் மலிவான திட்டங்கள் கொடுக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறினர். BSNL நிறுவனமும், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வருகிறது.

BSNL பல மலிவான ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர முயற்சித்து வரும் நிலையில், அதற்கு போட்டியாக தனியார் நிறுவனங்களும் ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகின்றன. எனினும், அவை வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுக்கின்றன. கட்டணத்தை உயர்த்தாமல், வேலிடிட்டியை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கின்றன.


சமீபத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் தனது இரு திட்டங்களின் வேலிடிட்டியை குறைத்துள்ளது. வோடபோன் ஐடியாவின் (Vi) பயனர் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையிலும், வோடபோன் ரூ.666 ரீசார்ஜ் திட்டம் 77 நாட்களுக்குப் பதிலாக 64 நாட்களுக்கு வேலிடிட்டி கொண்டதாக இருக்கும். ரூ.666 ப்ரீபெய்ட் திட்டமானது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகியவற்றை வழங்குகிறது. இது தவிர, Vi Hero நன்மைகளின் கீழ், பயனர்கள் Binge All Night, Weekend Data Rollover மற்றும் Data Delight போன்ற அம்சங்களையும் பெறுவார்கள்.

ஜூலை 2024 இல் கட்டணங்களை உயர்த்திய பிறகு நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களில் சிலவற்றை மாற்றி அமைத்துள்ளது. இந்த திட்டங்களின் வேலிட்டிட்டியை தவிர, மற்ற சலுகைகளில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story