71 லட்சம் இந்திய பயனர்களை தடை செய்த வாட்ஸ்அப் !!

71 லட்சம் இந்திய பயனர்களை தடை செய்த வாட்ஸ்அப் !!

whatsapp

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான whatsapp ஏப்ரல் மாதத்தில் மட்டும் 71 லட்சம் இந்திய பயனர்களை தடை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. விதிமுறைகள் மற்றும் தனி உரிமை கொள்கைகள் ஆகியவற்றை மீறியதற்கான தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பயனர்கள் பாதுகாப்பு சுழலை பராமரிக்கும் வகையில் விதிமுறைகளை மீறுவோர் மீது தொடர்ந்து இது போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளது. இதனை அடுத்து ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை 71 லட்சம் இந்திய பயனர்களை நீக்கி உள்ளது.

இதில் 13 லட்சத்து 2000 பயனர்களை அவர்களுடைய எந்தவித ரிப்போர்ட் பெறாமல் தடை செய்துள்ளது. whatsapp மூலம் அவதூறு பரப்பும் பயனர்களை நவீன தொழில்நுட்பம் மூலம் தானாகவே கண்டறியும் வகையில் வாட்ஸ் அப் ஏற்பாடு செய்துள்ளது.

பயணர்களின் கருத்துக்களை whatsapp தீவிரமாக எடுத்துக் கொள்கிறது. இது கணக்குகளை ஸ்கேன் செய்ய முக்கிய பங்கு வகிக்கிறது. பயனர்கள் ரிப்போர்ட் அல்லது கருத்துக்களை பிளாக் செய்யும் போது whatsapp இன் சிஸ்டம் அதை எடுத்துக் கொள்கிறது. இதன் மூலம் கூடுதல் விசாரணை செய்யப்பட்டு கணக்குகள் தடை செய்ய அனுமதிக்கிறது.

Tags

Next Story