Xiaomi Redmi Note 14 தொடர் நாளை அறிமுகம் - கையோடு வெளியான சிறப்பம்சங்கள் !!
Xiaomi Redmi Note 14
Xiaomi Redmi Note 14 தொடர் நாளை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். Redmi Note 14, Redmi Note 14 Pro மற்றும் Redmi Note 14 Plus ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்கள் நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளன. Redmi Note 14 தொடர் அறிமுகம் Realme மற்றும் Aiku போன்ற நிறுவனங்களுக்கு போட்டியை அதிகரிக்கும். மிட் ரேன்ஞ் வகை ஸ்மார்ட்போனான இதில் காணப்படும் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.
Redmi Note 14 போனில் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டதாக இருக்கலாம். இதில் MediaTek Dimension 7025 Ultra chipset இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 50MP+2MP இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, செல்ஃபிக்காக 16எம்பி முன்பக்க கேமரா வழங்கப்படலாம். பவர் பேக்கப்பிற்கு, 45W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5110mAh பேட்டரியைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
Redmi Note 14 Pro ஆனது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.67-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கலாம். இதில் MediaTek Dimension 7300 Ultra chipset பொருதப்பட்டிருக்கலாம். 50MP + 8MP + 2MP மூன்று பின்புற கேமரா அமைப்புடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படலாம். செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 50MP முன்பக்க கேமரா மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.
Redmi Note 14 Pro Plusக்கு 6.67 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படலாம். இந்த போனில் Qualcomm Snapdragon 7s Gen 3 சிப்செட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரின் மிகவும் சக்திவாய்ந்த கேமிராவை, இந்த மாடல் கொண்டிருக்க கூடும் ஸ்மார்ட்போன் 50MP+12MP+50MP டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வரலாம். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 20எம்பி செல்ஃபி கேமராவைப் பெற வாய்ப்பு உள்ளது. 6200mAh பேட்டரிக்கு 90W வேகமான சார்ஜிங் ஆதரவு கிடைக்கும்.