ஐயப்பன் பற்றி இசைவாணி பாடியதில் தவறு இல்லை: செல்வப்பெருந்தகை

ஐயப்பன் பற்றி இசைவாணி பாடியதில் தவறு இல்லை: செல்வப்பெருந்தகை

செல்வப் பெருந்தகை

ஐயப்பன் பற்றி இசைவாணி பாடியதில் தவறு இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

ஐயப்பன் பற்றி இசைவாணி பாடியதில் தவறு இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இசைவாணி 5 ஆண்டுகள் முன்பு ஐயப்பன் பாடல் ஒன்றை பாடி உள்ளார். அதில் எந்த தவறும் இல்லை. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்.சை சேர்ந்தவர்கள் புகார் கொடுத்து வருகின்றனர். இசைவாணி தவறாக பாடி இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். இசைவாணிக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு தமிழக அரசு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுத்ததற்கு காரணம் அவர் ஒரு மொழியையும், இனத்தையும் இழிவு படுத்தி பேசியிருந்தார். இசைவாணி பாடிய பாடல் மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் இல்லை. நானும் இந்து தான். நானும் ஐயப்பன் கோவிலுக்கு சென்று இருக்கிறேன். இந்த விவகாரத்தை ஆர்.எஸ்.எஸ். வேண்டுமென்றே பெரிதுபடுத்தி வருகிறது என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், மக்களை நம்பாமல் இயந்திரங்களை நம்பி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. விஞ்ஞானத்தை பா.ஜ.க தவறான முறையில் பயன்படுத்துகிறது. இந்த தேசம் அதானி, அம்பானிக்காக இருக்கிறதா? பா.ஜ.க அரசு பெரிய பெரிய தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் முறையாக தேர்தல் நடத்தப்படவில்லை. நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஓட்டுப் பதிவு எந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை. இனிவரும் காலங்களில் பா.ஜ.க. அரசு வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ் மொழி, திருக்குறள் பற்றி பேசும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் உத்திரமேரூர் கல்வெட்டில் உள்ள குடஓலை முறையை நடைமுறைபடுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் முன்னேறி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story