ஊட்டி டூர் போக திட்டமா !! அப்போ இதை எடுத்துக்கிட்டு போகாதீங்க அபராதம் மட்டுமில்ல அபாயம் ?

ஊட்டி டூர் போக திட்டமா !! அப்போ இதை எடுத்துக்கிட்டு போகாதீங்க அபராதம் மட்டுமில்ல அபாயம் ?

ஊட்டி 

பயணிகள் குடும்பம் குடும்பமாக சொந்த வாகனங்களில் நீலகிரிக்கு படையெடுத்து வரும் நிலையில் இந்த சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதி கட்டணம் உணவு கட்டணம் ஆகியவை அதிக அளவில் வசூலிக்கப்படுவதால் செலவுகளை கட்டுப்படுத்த நினைக்கும் சுற்றுலா பயணிகள் சிலர் வாகனங்களில் கேஸ் சிலிண்டர் அடுப்பு பாத்திரம் மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை கையோடு கொண்டு வருகிறார்கள்.

விரும்பிய இடங்களில் சமைத்து சாப்பிட்டு செலவை மிச்சப்படுத்தி செல்லலாம் என நினைக்கிறார்கள். ஆனால் நீலகிரி மழையின் நிலையோ வேராக உள்ளது கிட்டதட்ட 65 சதவீதம் வனப்பகுதியைக் கொண்டது அதனால் சாலையோரம் அல்லது வனப்பகுதி உரம் அவர்கள் வாகனங்களை நிறுத்தி சமையல் செய்தால் வறண்டு போன பகுதியில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. தீக்குச்சியை தெரியாமல் கீழே போட்டாலே பெரிய பாதிப்பு ஏற்படும் அளவிற்கு வறண்டு காணப்படுகிறது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட தீ பிடிக்கக்கூடிய பொருட்களை எடுத்து வர நீலகிரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனாலும் அதையும் மீறி சில சுற்றுலா பயணிகள் சிலிண்டரை எடுத்து வருகின்றனர். இதை கண்ட அதிகாரிகள் சிலிண்டருக்கு அபராதம் விதிக்க தொடங்கியுள்ளன. நீலகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தியாகராஜ முத்தரவின் பேரில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

நேற்று வேலூர் மற்றும் கர்நாடக மாநில மைசூர் பகுதியில் இருந்து பஸ் மற்றும் வேனில் வந்த சுற்றுலா பயணிகள் வாகனங்களில் இருந்து கேஸ் சிலிண்டர் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ 10,000 அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட சிலிண்டர்கள் மற்றும் நுகர்ப்பொருள் விஞ்ஞோகத் துறளிடம் வழங்கப்பட்டது. மேலும் நீலகிரி சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் எடுத்து வந்தால் வாகன பறிமுதல் உள்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

Tags

Next Story