கொள்ளை அழகு கொல்லிமலை!

கொள்ளை அழகு கொல்லிமலை!

கொல்லிமலை

இயற்கை வளம் மிக்க கொல்லிமலை இந்தியாவின் தெற்கு பகுதியில் தமிழ்நாட்டின் ஒரு சிறிய மலைத்தொடர் ஆகும் கொல்லிமலை கிழக்கு தொடர்ச்சி மலையின் கடைசி மலையாக அமைந்துள்ளது அற்புத மூலிகைகள் கொண்டும் அழகுற விளங்குகிறது கொல்லிமலை. நாமக்கலில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மலைப்பாதையின் தூரம் 26 கிலோ மீட்டர் செங்குத்தான இம் மலைப்பாறை 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள கார வள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும் மலைக்காடுகளில் நிலவிய கடுமையான சூழலில் காரணமாக இம்மலை பிரதேசத்துக்கு கொல்லிமலை என பெயர் வந்தது வரலாற்று சிறப்புமிக்க அறப்பளீஸ்வரர் கோயிலில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது நீர்வீழ்ச்சிக்கு செல்ல 720 படிக்கட்டுகள் உள்ளது காடுகளும் சோலைகளும் நிறைந்த அப்பகுதி இயற்கையான கண்கொள்ளா கட்சியாகும் இம்மலையே சித்தர்கள் வாழும் சதுரகிரி என சித்தர் இலக்கியங்கள் கூறுகின்றன இம்மலை மீது அரப்பளீஸ்வரர் கோயில் உள்ளது இதையொட்டி "அறப்பளீஸ்வரர் சதகம்" பாடப்பட்டுள்ளது இங்குள்ள ஆகாச கங்கை அருவி 200 அடிக்கு மேலிருந்து விழுகிறது. இங்கு மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர். தேனுக்கும், பலாவுக்கும் கொல்லிமலை புகழ்பெற்றது. மலைப்பகுதியில் வனவிலங்குகளான கரடிகளும், புலிகளும் வாழும் புதர்கள் உள்ளன. இங்குள்ள பள்ளத்தாக்குகள் விவசாயத்திற்கு பயன்படத்தக்க வகையில் உள்ளது கொல்லிமலை ஒரு சுற்றுலா தலமாக விளங்குகிறது.

Tags

Next Story