கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் சுற்றுலாத்துறை சார்பாக படகு போட்டி

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் சுற்றுலாத்துறை  சார்பாக படகு போட்டி

படகு போட்டியில் கலந்து கொண்டவர்கள் 

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் சுற்றுலா துறை சார்பாக படகு போட்டியில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு,பரிசுகளை தட்டி சென்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 17 ஆம் தேதி மலர்கண்காட்சியுடன் கோடை விழா துவங்கியது, இந்த வருடம் மலர்கள் கண்காட்சி மற்றும் கோடை விழா 10 நாட்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து தினந்தோறும் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளை ம‌கிழ்விக்க‌ பல்வேறு கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிக‌ள் நடத்தப்பட்டு வருகிறது,

இதனையடுத்து 9 வது நாள் கோடை விழாவில் சுற்றுலா துறை சார்பாக நட்சத்திர ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி படகு குழாமில் படகு போட்டி நடத்தப்பட்டது,இந்த படகு போட்டி 3 சுற்றுகளாக நடத்தப்பட்டது,

இதில் ஆண்கள் இரட்டையர் மிதிபடகு, பெண்கள் இரட்டையர் மிதிபடகு மற்றும் தம்பதியினர் மற்றும் கலப்பினர்(ஆண்,பெண்) இரட்டை மிதி படகு உள்ளிட்ட பிரிவுகளில் படகு போட்டி நடத்தப்பட்டது,இந்த போட்டிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்,

இதில் ஒவ்வொரு சுற்றிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த சுற்றுலா பயணிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் சுற்றுலா துறை சார்பில் வழங்கப்பட்டது, இந்த போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சேலத்தை சேர்ந்த ஸ்ரீதர் வசந்த் என்ற சுற்றுலா பயணிகள் முதல் பரிசினையும், பெண்கள் இரட்டையர் பிரிவில் கேரளை சேர்ந்த நிவேதிதா ஸ்ரீது என்ற சுற்றுலா பயணிகள் முதல் பரிசினையும்,

தம்பதியினர்,இரட்டை(ஆண்,பெண்) கலப்பினர் பிரிவில் கேரளாவை சேர்ந்த ஹில்மா சித்தார்த் முதல் பரிசினை தட்டி சென்றனர்,வெற்றி பெற்ற சுற்றுலாப்பயணிகளுக்கு கோட்டாட்சியர், ஆணையாளர்,சுற்றுலா துறை அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பரிசினை வழங்கினர்,இந்த படகு போட்டியினை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

Tags

Next Story