மலை பிரதேசங்களுக்கு டூர் போக ஆசையா ? அப்போ உங்களுக்கான இடம் தான் !!

மலை பிரதேசங்களுக்கு டூர் போக   ஆசையா ? அப்போ உங்களுக்கான இடம் தான் !!

சுற்றுலா

சிக்மகளூர்:


மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் அழகியலை தனக்குள் அடக்கியிருக்கும் சிக்மகளூரில் தான் கர்நாடகாவின் உயரமான முலயனகிரி சிகரம் இருக்கு.

சக்லேஸ்பூர்:


கர்நாடகாவின் ஊட்டினும் இதை சொல்றாங்க. இதுவும் மேற்குத்தொடர்ச்சி மலை மீது அமைந்துள்ள ஒரு அருமையான சுற்றுலா தளம்.

கெம்மணகுண்டி:


ஹெப்பி அருவி, கல்ஹட்டி அருவி, இசட் பாயிண்ட் போன்ற இடங்களை உள்ளடக்கிய இது, கர்நாடகாவின் அதிகம் அறியப்படாத ஒரு சுற்றுலா தளமாகும்.

அகும்பே:


த்ரில்லிங்கா எங்கயாச்சும் போகனும்னு ஆசைப்பட்டீங்கனா, அதுவும் பைக் அல்லது கார்ல இந்த அகும்பே போறது ஒரு வாழ்நாள் அனுபவத்தை உங்களுக்கு வழங்கும். தென் இந்தியாவின் சிரப்பூஞ்சினும் இதனை சொல்றாங்க.

மடிகேரி:


கூர்க் பக்கத்துல இருக்க மடிகேரில, மடிகேரி கோட்டை, ராஜாவின் கல்லறை, மண்டல்பட்டி வியூ பாயிண்ட் என சுத்திப் பார்க்க எக்கச்சக்க இடங்கள் இருக்கு.

கொடச்சாத்ரி:


உங்களுக்கு ட்ரெக்கிங் பிடிக்கும்னா, கண்டிப்பா நீங்க இங்க போகனும். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் மற்றும் அரபிக் கடலின் அழகை ஒரு சேர இங்கிருந்து ரசிக்கலாம்.

நந்தி ஹில்ஸ்:


சென்னைவாசிகளுக்கு மகாபலிபுரம் மாதிரி பெங்களூருவாசிகளுக்கு இந்த நந்தி ஹில்ஸ். இங்க இருந்து சன்ரைஸ் பாக்குறதுக்காகவே வார இறுதி நாட்கள்ல இந்த சிகரத்துக்கு மக்கள் படையெடுக்குறாங்க. இங்க எப்பவுமே குளிர்ச்சியாக இருக்கும்.

Tags

Next Story